தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 4, 2020, 8:15 PM IST

ETV Bharat / opinion

கரோனா தடுப்பூசிகளை சேமிக்க குளிர்சாதன வசதி!

அடுத்தாண்டு, தடுப்பூசி தயாராக இருக்கும் பட்சத்தில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அதனை எப்படி சரியான நேரத்தில் எடுத்துச் செல்வது என்பது குறித்த திட்டத்தை அரசு வகுத்தாக வேண்டும். இந்தியாவில் கரோனா தடுப்பூசி விநியோகத்தில் உள்ள சவால்கள் குறித்து காண்போம்.

கரோனா தடுப்பூசி  குளிர்சாதன வசதி  Covid-19 Vaccine  Distribution And Storage Facilities In India  Storage Facilities In India  India
கரோனா தடுப்பூசி குளிர்சாதன வசதி Covid-19 Vaccine Distribution And Storage Facilities In India Storage Facilities In India India

உலகையே ஆட்டிப்படைத்துவரும் கரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன.

பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டுவரும் 100 தடுப்பூசிகளின் பாதுகாப்பு சோதனை இரவு பகல் பாராமல் நடைபெற்றுவருகிறது.

அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பூசிக்கு உலகிலேயே முதல் நாடாக பிரிட்டன் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மாடர்னா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு அவசரப் பயன்பாட்டிற்கான அனுமதி அளிக்கக் கோரி அந்நிறுவனம் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளது.

கரோனாவுக்கு எதிரான போரில் பாதி கிணற்றை தான் தாண்டியுள்ளோம். அடுத்தாண்டு, தடுப்பூசி தயாராக இருக்கும் பட்சத்தில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அதனை எப்படி சரியான நேரத்தில் எடுத்துச் செல்வது என்பது குறித்த திட்டத்தை அரசு வகுத்தாக வேண்டும்.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி விநியோகத்தில் உள்ள சவால்கள் குறித்து காண்போம்.

கரோனா தடுப்பூசி விநியோகத்தில் முக்கிய பங்காற்றும் குளிர்சாதனம் வசதி!

கரோனாவுக்கான தடுப்பூசிகளை குளிர்சாதன வசதியில் சேமித்து வைக்க வேண்டும். அதிகப்படியான வெப்ப நிலை காரணமாக அந்த தடுப்பூசிகளின் திறன் பாதிக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, ஃபைஸர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிகளை -70 டிகிரி செல்சியஸ் வசதியில் சேமிக்க வேண்டும்.

அதாவது, அண்டார்டிகா கண்டத்தில் குளர்காலத்தில் நிலவும் நிலையை விட குளிர்ந்த தட்பவெப்ப நிலையாக இருத்தல் வேண்டும்.

எனவே, இந்தியாவில் அதிகப்படியான தடுப்பூசிகள் தேவைப்படும் பட்சத்தில் சிறப்பான குளர்சாதன வசதியை ஏற்படுத்த வேண்டும்.

குளர்சாதன வசதி சேமிக்கும் திறன்
அரசு குளிர்சாதன வசதி 200-250 மில்லியன்
தனியார் குளிர்சாதன வசதி 250-300 மில்லியன்
மொத்தம் 450-550 மில்லியன்
இந்தியாவில் குளர்சாதன வசதி
மின்சாரத்தில் இயங்கக்கூடியவை
உபகரணங்கள் தட்பவெப்பநிலை (டிகிரி செல்சியஸ்)
குளர்சாதன வசதி கொண்ட அறை 2 முதல் 8
வாக் இன் கூலர் 2 முதல் 8
வாக் இன் ஃப்ரீசர் -15 முதல் -25
குளிர்சாதன பெட்டிகள் 2 முதல் 8
டீப் ஃப்ரீசர் -15 முதல் -25
மின்சாரத்தில் வசதி தேவைப்படாதவை
குளிர் பெட்டி 2 முதல் 8

தடுப்பூசிகளை உலகின் அனைத்து நாடுகளுக்கும் எடுத்து செல்வது மிக கடினமான பணியாகும். தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற சூழலில் தடுப்பூசிகளை சேகரித்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.

இதனையே, குளர்சாதன சங்கிலி தொடர் என்கிறோம்.

தடுப்பூசிகளை சேகரித்து அதனை விநியோகம் செய்யும் வரை குறிப்பிட்ட அளவிலான தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப குளர் சாதன வசதி தேவைப்படுகிறது. அளவுக்கு மீறிய அதிகப்படியான வெப்பநிலையும் குறைந்த அளவிலான குளர்சாதனமும் தடுப்பூசியை பாதிப்புள்ளாக்கும்.

ABOUT THE AUTHOR

...view details