உண்மையான எல்லைக்கட்டுப்பாடு கோட்டை ஒட்டி கிழக்கு லடாக்கில் பாங்கோங் சோ ஏரியில் இந்திய நிலப்பகுதிக்குள் மக்கள் சீன விடுதலைப்படை மீண்டும் ஆக்கிரமிக்க முயற்சித்தது. இந்த முயற்சி வெற்றி பெறும்முன்பு அதனை இந்திய தடுத்து நிறுத்தியது. இது குறித்து திங்கள் கிழமையன்று இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கை குறித்து சீனா வலுவான கருத்தை வெளியிட்டபோதும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செவ்வாய்கிழமையன்று, பெய்ஜிங்கின் நடவடிக்கைகள் தொடர்ந்து இருதரப்பு நல்லுறவு ஒப்பந்தங்களை மற்றும் மரபுகளை மீறும் வகையில் இருப்பதாகவும், இரண்டு பெரிய ஆசிய நாடுகளின் எலையில் நிலவும் அமைதி மற்றும் சுய கட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டும் வகையில் இருப்பதாகவும் மீண்டும் வலியுறுத்தியது.
அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆகஸ்ட் 29-30-க்கும் இடைப்பட்ட இரவில் சீனா ஆத்திரமூட்டும் ராணுவ சூழ்ச்சி நடவடிக்கைளில் ஈடுபட்டது. பாங்கோங் சோ ஏரியின் தெற்கு கரைப் பகுதியில் தற்போதைய நிலையை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
“பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் மற்றும் நம்முடைய நலன்களை காக்கும் வகையிலும் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு போதுமான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய தரப்பு செயல்பட்டது” என்று ஸ்ரீவஸ்தவா கூறி உள்ளார்.
“மேலும், ஆகஸ்ட் 31-ம் தேதி சூழ்நிலையின் பதற்றத்தை தணிக்கும் வகையில் இரு தரப்பின் கள கமாண்டர்கள் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோதிலும் சீன படைகள் ஆத்திரமூட்டும் செயல்களில் மீண்டும் ஈடுபட்டுள்ளன. தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கப்பட்டதால், ஒரு தலைபட்சமாக தற்போதைய நிலையை மாற்றும் முயற்சியை இந்தியாவால் தடுக்க முடிந்தது” என்றும் கூறி உள்ளார்.
டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜிரோங், “இந்தியா மற்றும் சீனா இடையே முந்தைய பலதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளின்போது அடைந்த ஒற்றுமையை மீறும் வகையில் இந்திய படைகள் செயல்பட்டது. இந்திய-சீனா எல்லையின் மேற்கு பகுதியில் ரெக்கின் பாஸ் அருகே பாங்கோங் சோ ஏரி அருகே உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுக்குள் சட்டவிரோதமாக மீண்டும் ஊடுருவி வெளிப்படையாக ஆத்திரமூட்டியது இதனால் எல்லைப்பகுதிகளில் மீண்டும் பதற்றம் தூண்டப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்துக் கூறியது.
“இந்தியாவின் இந்த நகர்வு என்பது சீனாவின் பிராந்திய இறையாண்மையை முற்றிலும் மீறியதாகும், இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், மரபுகளை முக்கியமான ஒற்றுமை நடவடிக்கைகளை கடுமையாக மீறியிருக்கிறது. இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் நிலவி வந்த அமைதி கடுமையாக சேதப்படுப்படுத்தப்பட்டுள்ளது. கள அளவில் நிலவும் சூழல்களை அமைதிப்படுத்தவும் மற்றும் பதற்றத்தைத் தணிக்கவும் இரு தரப்பிலும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் சீனா இதை உறுதியாக எதிர்க்கிறது.
திங்கள் கிழமை, தற்போதைய சூழலை மாற்றும் வகையில் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைளில் லடாக்கின் கிழக்குப்பகுதியில், தொடர்ந்து கொண்டிருக்கும் அமைதி நடவடிக்கைகளுக்கும் ராணுவ மற்றும் தூதரக ரீதியான முந்தைய ஒற்றுமை நடவடிக்கைகளுக்கும் முட்டுக்கட்டையின் போடும் வகையில் சீன விடுதலை ராணுவம் செயல்படுகிறது” என இந்திய ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“பாங்கோங் சோ ஏரியின் தெற்கு கரையில் சீன ராணுவத்தின் நடவடிக்கைகளை இந்திய படைகள் முன்கூட்டியே தடுத்தன. கள அளவிலான நோக்கங்களை மாற்றவும். ஒருதலைப்பட்சமான சீன நோக்கங்களைத் தடுக்கவும், நமது நிலைகளை வலுபடுத்துவதற்கு போதுமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது,” என ராணுவ அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. “இந்திய ராணுவம் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே அமைதியை நிர்வகிக்கக் கடமைப்பட்டிருக்கிறது, தவிர இந்தியா தன் பிராந்திய ஒற்றுமையை பாதுகாக்கவும் சரிசமமாக தீர்மானித்துள்ளது.
இந்த 45 ஆண்டுகளில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே முதன்முறையாக இருதரப்பிலும் உயிரிழப்பு நேரிடும் வகையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் குல்வான் பள்ளத்தாக்கில் ரத்தம் தோய்ந்த மோதல் நிகழ்ந்தபின்னர் லடாக்கில் பதற்றத்தணிப்பதற்கான ஓற்றுமையை சீன மக்கள் விடுதலைப் படை மீறியதை அடுத்து இந்தியா-சீனா இடையே புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது” என இந்தியா கூறி உள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹுவா சுனிங் கடந்த செவ்வாய்கிழமையன்று வழக்கமான செய்தியாளர் சந்திப்பில், “உண்மையான எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இந்திய படைகள் ரெக்கின் மலை மற்றும் பாங்கோங் சோ ஏரியின் தெற்கு கரையில் சட்டவிரோதமாக ஊடுருவினர்” என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.