தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

இடதுசாரிகள், காங்கிரஸ்: கேரளாவின் இருமுனை போட்டிகளை உடைக்குமா பாஜக?

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி, கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி சுழற்சியை மாற்ற முயலும் பாஜகவுக்கு அது மிக கடினமான பணியாக இருக்கும் என ஈடிவி பாரத் மூத்த செய்தியாளர் அமித் அக்னிஹோத்ரி தெரிவிக்கிறார்.

Sreedharan
Sreedharan

By

Published : Mar 31, 2021, 12:45 PM IST

கேரளாவில் UDF மற்றும் LDF இடையே முப்பதாண்டு காலமாக மாறி மாறி வரும் ஆட்சி மாற்றத்தை உடைக்க பாஜக விரும்புகிறது. ஆனால் அதற்கு ஒரு வலுவான அமைப்பு மற்றும் பிரபலமான தலைவர் இல்லாததால் அது மிகவும் கடினமாக இருக்கிறது.

இந்த இரண்டு குறைபாடுகளையும் ஈடுசெய்ய, நடுத்தர வர்க்கம் மற்றும் இளம் வாக்காளர்கள் எதிர்பார்க்கும் தூய்மையான பிம்பமாக தேசிய தலைநகரில் மதிப்புமிக்க திட்டங்களை மேற்பார்வையிடும் மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் தொழில்நுட்ப வல்லுநர் இ.ஸ்ரீதரனை பாஜக பெரிதும் நம்பியிருக்கிறது.

அவர் பாஜகவில் சேர்ந்த உடனேயே, மாநிலத் தலைவர்கள் ஸ்ரீதரனை, காவிக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகக் கருதினர், ஆனால் மத்திய தலைமை உடனடியாக அந்த செய்தியை அதிகாரப்பூர்வமற்றதாக வைத்திருக்க முடிவு செய்தது.

பாலக்காடு தொகுதியில் போட்டியிடும் இந்த தொழில்நுட்ப வல்லுநருக்காக பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் சிபிஐ-எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆகியவை ஊழலில் ஈடுபடுவதாகவும், அதிகாரத்தில் இருக்க மேட்ச் பிக்ஸிங் செய்வதாகவும் குற்றம் சாட்டினார். கேரளாவில் மாற்றத்தைக் கொண்டு வருவதாக உறுதியளித்த UDF மற்றும் LDF மீது இளம் வாக்காளர்கள் ஏமாற்றமடைந்ததாகவும் மோடி குற்றம் சாட்டினர்.

2016ல் ஒரு சட்டசபை உறுப்பினரை பெற்ற பாஜக, சபரிமலை கோயிலில் 10-50 வயதுக்கு இடைப்பட்ட பெண்களுக்குள் நுழைய அனுமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவை ஆதரித்த LDF அரசாங்கத்திற்கு எதிராக 2018ல் ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருந்தது.

இந்தத் திட்டம் 2019 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு பயனளிக்கவில்லை, ஆனால் சபரிமலை கோயிலின் இடமான பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பாலக்காடு மற்றும் பந்தளம் போன்ற பல நகராட்சிகளில் காவிக்கட்சி தனது நிலையை விரிவுபடுத்த உதவியது.

தலைநகர் திருவனந்தபுரத்தில் சில லாபங்கள் இருந்தன, இது LDF ஆதரவு வாக்குகளை UDF வாக்கு வங்கியை அதிகப்படுத்தியது.

ஆனால் ஒரு சில உள்ளாட்சி தேர்தலில் பெற்ற ஆதாயங்களை மாநிலம் முழுவதும் ஒரு பரந்த ஆதரவு தளமாக விரிவுபடுத்துவது என்பது ஒரு வலுவான கட்சி அமைப்பால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், LDF முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா போன்ற UDF தலைவர்களின் செல்வாக்கை எதிர்கொள்ள காவி கட்சியில் நீண்ட காலமாக பொது வாழ்வில் இருந்த ஒரு பிரபலமான தலைவர் இல்லை. இதை மனதில் வைத்து தான், வழக்கமாக தேர்தல் பரப்புரைகளை இந்தியில் நிகழ்த்தும் பிரதமர் மோடி தென் மாநிலத்தில் உள்ள வாக்காளர்களை கவர பாலக்காடு கூட்டத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் சமீபத்தில் கேரளாவில் பரப்புரை செய்யும் போது, வாக்காளர்கள் காவிகட்சியின் பரப்புரைக்கு மயங்கக்கூடாது என்றும், அதற்கு பதிலாக பாரம்பரிய UDF vs LDF ஆட்சி சுழற்சியை ஆதரிக்க வேண்டும்; அதுதான் கேரள மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையும் சமூக நல்லிணக்கத்தையும் உறுதிசெய்து மக்கள் நன்மைக்காக செயல்படும் என்றும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details