தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 1, 2020, 12:11 PM IST

ETV Bharat / opinion

#அமெரிக்கத் தேர்தல் களம் 2020: சர்வதேச ஒப்பந்தங்களில் பிடன் மீண்டும் சேருவாரா?

பாரீஸ் பருவநிலை சட்டம் முதல் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் வரை பல்வேறு சர்வேதச ஒப்பந்தங்களில் இருந்து டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வெளியே வந்திருக்கிறது. பல்வேறு ஐநா சபையின் முகமைகளுக்கான நிதி உதவியை ரத்து செய்திருக்கிறது. வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பன்முக ஒப்பந்தங்கள் அல்லது இதர சர்வதேச அமைப்புகளான உலக வர்த்தக அமைப்பு போன்றவை மீது சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்து வலுவிழக்கச் செய்திருக்கிறது.

அமெரிக்கத் தேர்தல்
அமெரிக்கத் தேர்தல்

“நான் அதிபராகப் பதவியேற்ற சில நாட்கள் கழித்து, வாஷிங்டன் அமைப்பைப் பார்த்து நாம் அதிர்ச்சியடைந்தோம். கடந்த ஆட்சி காலகட்டத்தின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் டிரான்ஸ் பசிபிக் பங்கெடுப்பில் இருந்து விலகினேன். அப்போது நான் கீஸ்டோன் எக்ஸ்எல் மற்றும் டகோட்டா அணுகல் குழாய் வழிகளுக்கு ஒப்புதல் அளித்தேன். நேர்மையற்ற அதிக செலவு பிடிக்கும் பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்த த்தை முடிவுக்குக் கொண்டு வந்தேன்.

முதன்முறையாக அமெரிக்க எரிசக்தி சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது,” என குடியரசு கட்சியின் வேட்பாளராக மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் பேசினார். கட்சி மாநாட்டில் கடைசி நாள் கூட்டத்தில் ஏற்புரை நிகழ்த்தியபோது டொனால்டு டிரம்ப் இதனைக் குறிப்பிட்டார். “பயங்கரமான, ஒருதலைபட்சமான ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்தும் நான் விலகினேன்,” என்று கூறிய டிரம்ப், மேலும் பேசும் போது, அமெரிக்காவின் தமது முதல் கொள்கையை எடுத்துக்காட்டி 71 நிமிடங்கள் உரையாற்றினார்.

#அமெரிக்க தேர்தல் களம் 2020 என்ற இந்த அத்தியாயத்தில் வெள்ளை மாளிகையின்அதிபர் தேர்தல் போட்டியில் உலக அளவில் மற்றும் சர்வதேச அமைப்புகளில் என்ன பங்கு இருக்கிறது? ஒரு வேளை டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபர் ஆனால், உலக அமைப்புகளில் தலைமைப் பங்கு வகிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்து, அமெரிக்கா அதிக அளவுக்கு சுயசார்பு கொண்டதாக மாறுமா என்று மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா சர்மா கேட்கிறார்.

“1942-ம்ஆண்டு ஜனவரியில் இருந்து அமெரிக்கா எந்த தலைமை பாத்திரத்தில் பங்கு வகித்தது. அதன் நீண்ட, நீண்ட பயணத்தில் இருந்து அதாவது வாஷிங்டன் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்குவதற்கான நடைமுறைகள் தொடங்கின. இந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா பெற்ற தலைமைப் பங்கு எவ்வாறக இருப்பினும் குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் நீர்த்துப்போகவில்லை. தேர்தல் முடிவின் தாக்கம் என்பது இந்த விஷயத்தை மையப்படுத்தியதாக முக்கியமான விளைவை ஏற்படுத்தும்,” என்றார் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவிற்கான முன்னாள் நிரந்தர பிரதிநிதியான அசோக் முகர்ஜி.

“அமைப்புகளில் இருந்து விலகுவது என்பது ஒரு சரிவுதான் எனப் புரிந்து கொள்ளப்படுகிறது. 2006-ம்ஆண்டு ஐநா பொதுசபையானது மனித உரிமைகள் கவுன்சிலை உருவாக்கியது. அப்போது அமெரிக்க தூததராக இருந்த ஜான்போல்டன், இந்த கவுன்சில் உருவாக்கத்துக்கு எதிராக வாக்களித்தார். இதர மூன்று நாடுகளும் இதற்கு எதிராக வாக்களித்தன. ஆனால், பெரும்பாலான 170 நாடுகள் ஆதரவு தெரிவித்ததன் அடிப்படையில் சர்வதேச மனித உரிமை கவுன்சில் உருவாக்கப்பட்டது. இப்போது அமெரிக்கா கடந்த மூன்று ஆண்டுகளாக இதில் இடம்பெறவில்லை. ஐநா மனித உரிமைகள் அமைப்புக்கு தேர்தல் நடத்த கோரிக்கை விடுக்கவிலை.

சர்வதேச ஒப்பந்தங்களில் பிடன் மீண்டும் சேருவாரா

இந்த மூன்று ஆண்டுகளில் மனித உரிமை கவுன்சிலானது, இஸ்ரேல் நாட்டுடனான ஒப்பந்த முறைகள் உள்ளிட்ட முறைகளை உருவாகியது. தூதுவர் நிக்கி ஹாலேய் காலகட்டத்துக்கு நீங்கள் விரைவாக முன்னோக்கி சென்றால், அவர்கள் இந்த முறையை விமர்சனம் செய்திருக்கின்றனர். முறைகள் வரைவு செய்யப்பட்டபோது நீங்கள் அறையின் உள்ளே இல்லை. எனவே, நீங்கள் அறையின் வெளியே இருந்து கொண்டு உங்களால் ஏதும் செய்ய முடியாது,” என்று விவரிக்கிறார் அந்த ஓய்வு பெற்ற தூதுவர்.

பாரீஸ் பருவநிலை சட்டம் முதல் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் வரை பல்வேறு சர்வேதச ஒப்பந்தங்களில் இருந்து டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வெளியே வந்திருக்கிறது. பல்வேறு ஐநா சபையின் முகமைகளுக்கான நிதி உதவியை ரத்து செய்திருக்கிறது. வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பன்முக ஒப்பந்தங்கள் அல்லது இதர சர்வதேச அமைப்புகளான உலக வர்த்தக அமைப்பு போன்றவை மீது சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்து வலுவிழக்கச் செய்திருக்கிறது.

நவம்பர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றால், இந்த முடிவுகளை அவரது நிர்வாகம் திரும்பப்பெற விரும்புவாரா மற்றும் சர்வதேச பன்முக அமைப்புகளை வலுப்படுத்துவாரா? ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்த த்தை மீண்டும் பிடன் நிர்வாகம் செயலுக்கு கொண்டு வந்தால், அந்த சமயத்தில், ஈரான், சீனா மற்றும் ரஷ்யா இடையே முக்கியமான ஒத்துழைப்பு அதிகரிக்குமா?

ஈரானுக்கு ஆதரவாக இருக்கிறது என்று கூறப்பட்டபோதும் அந்த நாட்டுனான அணு சக்தி ஒப்பந்தத்தை ஒபாமா நிர்வாகம் செயல்படுத்தியது. அது உண்மையிலே மிகவும் புகழ்பெற்ற கண்ணோட்டமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், உண்மையில் இது போன்ற பெரிய ஒப்பந்தத்தில் ஈரான் தமக்காக பேரம் பேச முடிந்தது. விலக்கிக் கொள்ளுதல், ஆய்வு செய்தல் போன்ற நடைமுறைகளில் இருந்த பிரிவுகளில் அந்த ஒவ்வொரு பிரிவுகளிலும் அது தமது பேர உத்திக்கு பெயர் பெற்று விளங்கியதை நீங்கள் அறியலாம்,” என்கிறார் ஐக்கிய நாடுகளுக்கான முன்னாள் தொழில்நுட்ப ஆலோசகரான டாக்டர் ராஜேஸ்வரி ராஜகோபாலன்.

அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையில் அணு சக்தி மற்றும் விண்வெளி முயற்சிகளுக்கான தலைவராகவும் புகழ்பெற்ற நபராகவும் டாக்டர் ராஜகோபாலன் திகழ்கிறார். சர்வதேச தடைகள் அல்லது சிக்கல்கள் ஆகியவற்றுக்கு இடையே அவற்றை ராஜகோபாலன் நம்புகிறார். ஈரான் அணுசக்தித் திட்டத்தைத் தொடரப்போகிறது. இது பிடன் நிர்வாகத்துக்கு மிகவும் கடினமாக இருக்கும். குறிப்பாக தெஹ்ரான் விவகாரத்தில் சீனா எதிர்காலத்தில் என்ன செய்யும் என்பதற்கு ஏற்ப இந்த ஒப்பந்தம் குறித்து பிடன் மறுபரிசீலனை செய்வார்.

“சீனா விவகாரத்தில் மிகவும் கடினமான போக்கைக் கொண்டிருப்பது என்று பிடன் குழு ஏற்கனவே நிரூபித்திருக்கிறது. இது பிடன் குழுவுக்கு கடினமான சூழல்நிலையைக் கொடுப்பதாக இருக்கும். சீனாவை எப்படி கையாளப்போகிறீர்கள் என்பது பிரச்னைக்குரியது மற்றும் சவாலானது. சீனாவின் பிரச்னை, கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெரியதாக ஆகிவிட்டது.

அமெரிக்கா சில முக்கியமான அமைப்புகளில் இடைவெளி விட்டதால் அதனை சீனா கைப்பற்றி இருக்கிறது. பல்வேறு ஐநா அமைப்புகளில் சீனா தலைமை பொறுப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. மற்றும் கடந்த ஆண்டின் இறுதியில் அவர்கள் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டது போல ஈரான்-சீனா-ரஷ்யா நாடுகள் கூட ஒரு உணர்வில் இணைந்திருக்கின்றன. எப்படி ஈரான்-சீனா என்ற இரண்டும் ஒருங்கிணைந்தன. அதிகாரங்களை நீங்கள் எப்படி நிர்வகிக்கப்போகிறீர்கள் என்பதில் இப்போது பிடன், சிக்கலான சூழலில் இருக்கிறார்,” என்றார் அவர்.

பாரீஸ் பருவநிலை மாற்றச் சட்டத்தில் இருந்து விலகியது ஒரு தேர்தல் விஷயமாக இருக்கிறதா என்று, பிடிஐ-யின் நியூயார்க் நகரின் மூத்த செய்தியாளர் யோசிதா சிங்கிடம் கேட்டபோது, “காட்டு தீ, புயல்கள், ஆசியா முழுவதற்குமான மழை வெள்ளம் ஆகியவை பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களாகும். இதை நாம் எல்லோரும் இப்படித்தான் பார்க்கின்றோம். நிஜ வாழ்க்கையில் நாம் அனைவரும் அதன் சுமைகளைத் தாங்குகின்றோம். டிரம்ப் நிர்வாகம், அமெரிக்க வரலாற்றிலேயே பெரிய சூழ ல் சீர்கேட்டாளராக இருந்தது.

பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியே வருவது என்பது ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதம் என்ற காலகட்டத்துக்குள் தீர்மானிக்கப்பட்டதல்ல .இதற்கு பல ஆண்டுகள், பல முயற்சிகள் ஆனது, இந்த ஒப்பந்தத்தில் தொடர்புடைய பல பங்குதாரர்கள் கொடுப்பதும், எடுப்பதுமாக இருந்தனர். நாம் அனைவரும் மனிதர்கள் என்ற முறையில் விரும்பத்தகாத ஒன்றை அது ஏற்படுத்துகிறது. குறிப்பாக வளரும் நாடுகள், சிறிய தீவுகள், சமூகங்கள் அதிகம் பாதிக்கப்படக் கூடியவையாக இருக்கின்றன,” என்றார்.

“ஓட்டுப்போடும்போது, பருவநிலை மாற்றத்தை ஒரு பெரிய விஷயமாக மக்கள் கருதுவதில்லை. இந்த குறிப்பிட்ட புள்ளியில்தான் இது பொருளாதாரமாக, வேலைவாய்ப்பாக, சுகாதார நலன்கள்பற்றியதாக குறிப்பாக, பெருந்தொற்றாக இருக்கிறது. உலகில் அமெரிக்கா மிகவும் அதிகாரம் பெற்ற நாடாக இருக்கிறது. உலகில் மிகவும் வலுவான பணம் படைத்த நாடாகவும் இருக்கிறது. ஆனால், இந்த பெருந்தொற்று அந்த நாட்டை அழிவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. சுகாதார கட்டமைப்பு நொறுங்கி விழுந்து விட்டது. இவையெல்லாம்தான் இப்போது விஷயங்களாக இருக்கின்றன,” என்று மேலும் அவர் கூறினார்.

இதற்கிடையே, டிரம்ப்பின் எதிர் அணி வேட்பாளர் ஜோ பிடன், தாம் நவம்பர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் சேரும் என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார். ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் முன்பு எடுக்கப்பட்ட உறுதியில், அமெரிக்கா தொடர்ந்து உலக சுகாதார அமைப்பில் முன்னணி நிதி பங்களிப்பாளராக மற்றும் தொழில்நுட்ப பங்குதார ராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் தொடக்கத்தில் நடைமுறைக்கு வரும்படி டிரம்ப் உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். எனவே, பிடன் ஒரு ஆண்டுகால செயல்முறையை மாற்றி அமைப்பார்.

“உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதால், அது சீனாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடத்தை விட்டுக் கொடுப்பது போன்ற பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தவிர சில பன்முக அமைப்புகள் ஒரே ஒரு அதிகாரத்தை மட்டும் பிடித்துக் கொண்டு இருக்கக் கூடாது என்றும் அவற்றை மறுசீரமைப்பதற்கான நேரம் இது என்றும் அமெரிக்காவின் விலகல் வெளிப்படுத்துகிறது. அவர்கள் ஒரே ஒரு அதிகார மையத்தால் கடத்தப்படக் கூடாது.

பன்முக உறவுகள் கொண்ட அமைப்புகளின் தலைமை என்பது தொடர்ந்து ஒரே ஒரு நாடால் எடுத்துக் கொள்வதாக இருக்கக் கூடாது. தவிர இந்தியா தலைமை தாங்குவதற்கான வளத்தை மற்றும் பொறுப்பைக் கொண்டுள்ளது. இந்த சமயத்தில் சில ஒரே கருத்துடைய நாடுகளுடன் பங்குதாரராக ஒன்றுணைந்து செயல்பட இது சரியான தருணமாகும். தங்களுடைய கூட்டணி நாடுகளுடன் மற்றும் பங்குதார ர்களுடன் பணியாற்றி, நடுநிலை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும். இந்த அமைப்புகள் மிகவும் தொழில்முறையில் பணியாற்ற வேண்டும், “ என்றார் டாக்டர் ராஜகோபாலன்.

அசோக் முகர்ஜி மேலும் வாதிடுகையில், மறுசீரமைப்பைப் பொறுத்தவரை உலக சுகாதார அமைப்புக்கு உள்ளே இருந்துதான் தீர்வுகள வரவேண்டும் என்றார். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்தபோது, சீனாவுக்கு ஆதரவாக, உலகசுகாதார நிறுவனம் சார்பு நிலை எடுத்தது என்ற கடுமையான குற்றசாட்டுகள் தொடர்பான விஷயங்களில் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும். மேலும் அவர் கூறுகையில், “பலதரப்பு மற்றும் அமெரிக்க தலைமை பற்றிய விவாதங்களுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் 2021-ம் ஆண்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுபிபனராக தமது உறுப்பினர் பதவியை பெறுவதற்கு இந்தியா காத்திருக்கிறது. முக்கியமான காரணங்களை நோக்கி குரல் கொடுக்கும் வகையிலான பங்கெடுப்பை அது உருவாக்கவேண்டும்.

நமது ஆசிய அருகாமை நாடுகளில் மற்றும் ஆசிய நாடுகளைச் சுற்றி நிலவும் குறிப்பிட்ட விஷயங்களில் மேலும் ஈடுபாட்டுடன் கூடிய நடவடிக்கைகளை வெளிகாட்டும் வகையில் செயல்படுவதற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் சேம்பரில் இந்தியா அரசியல் ரீதியாக உள்ளே இருக்க வேண்டும். ஏமன், சிரியா போன்ற விஷயங்கள் மற்றும் தெற்கு சூடான் போன்ற நமது பொருளாதார முதலீடுகள் கொண்ட விஷயங்களை எல்லா நேரங்களிலும் நிரந்தர உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளைக் கையாள அனுமதிக்கக் கூடாது,” என்றார் முகர்ஜி.

பிடன் குழு-ஹாரீஸ் இருவரும் பன்முக சர்வதேச அமைப்புகளில் அமெரிக்காவின் தலைமையை மீட்டெடுப்பது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்களா என்றும்,ஒருவேளை டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் என்னவெல்லாம் சவாலாக இருக்கும் என்றும் கேட்டபோது, யோஷிதா சிங் கூறுகையில், “ஜனநாயக கட்சியினர் செனட் மற்றும் அவையை பிடிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்களுக்குத்தான் எண்ணிக்கை இருக்கக் கூடும். இந்த அமைப்புகளில் மற்றும் ஒப்பந்தங்களில் எல்லாம் அமெரிக்கா மீண்டும் இடம் பெறுவதற்கு பிடனும்,வெள்ளை மாளிகையால் மட்டுமே முடியும். அவர்தான் அந்த முயற்சியை எடுப்பார்,” என்றார்.

ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐ.நா அமைப்புகள் , முகமைகளின் முக்கியமான தலைமைப்பதவிகள், ஐநா அமைப்புகளில் நடைபெற உள்ள 15 தேர்தல்கள் முக்கியமானவை ஆகும். ஐ.நா-வின் முகமைகளை மட்டுமின்றி, ஒட்டு மொத்த ஐ.நா-வையுமே டிரம்ப் மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஒருவேளை டிரம்ப் திரும்பவும் அதிபராக வந்தால், இந்த இடங்களுக்கு அமெரிக்காவின் வேட்புமனுக்களை நீங்கள் வெளியேற்ற வேண்டியதிருக்காது. அப்போது சீனா மற்றும் இதர நாடுகள் ஐநா-வில் தங்களது ஆதிக்கத்தை அதிகரிப்பார்கள். தங்களது தலைமைப் பதவிக்கான விண்ணப்பங்களை முன்னெடுப்பார்கள். இந்த அமைப்புகளின் தலைவர்களாக அவர்கள் இடம்பெறுவார்கள். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். முடிவுகளை எடுப்பார்கள். எனவே, அமெரிக்கா பலதரப்புவாத த்திலிருந்து வெளியேற முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்,” என்றார்.

இதையும் படிங்க: அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அடையாளம் அனிதா

ABOUT THE AUTHOR

...view details