ஹைதராபாத் : பத்து நாள்கள் பெரும் போருக்கு பின்னர், கடந்த 24 மணி நேரத்தில் தாலிபன்கள் கைகளில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விழுந்தது. அமெரிக்க தயவில் ஆட்சி செலுத்திய அஷ்ரப் கானியின் 20 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஆப்கானிஸ்தான் குடிமக்கள் பயமுறும் நிலையில், தாலிபன்கள் அங்கு இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். அமெரிக்காவின் இரட்டை கோபுரம் 2001இல் அல்கொய்தா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பின்னர், அமெரிக்கா ஆப்கானிஸ்தானை கட்டுக்குள் கொண்டுவந்தது.
பென்டகன் (அமெரிக்க ராணுவ தலைமையகம்) தாக்கப்பட்டதற்கு பழிவாக்கும் நோக்கோடு வந்த அமெரிக்க ராணுவ படைகளின் நடவடிக்கைகள் ஆதாயத்தை கொடுக்கவில்லை. தாலிபன்கள் தங்களது வழக்கமான பழங்குடி போர் முறையை பின்பற்றி பயணித்தனர்.
இதற்கிடையில் அமெரிக்கா மூன்று லட்சம் ஆப்கானிய படைவீரர்கள், காவலர்கள் உள்ளிட்டோருக்கு போர் பயிற்சி அளித்தது. ஆனால் இன்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு ஓடிவிட்டார். அவருடன் உளவுத்துறை தலைவர் அம்ருல்லா சலே (Amrullah Saleh)வும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இவர்தான் தாலிபன்களுக்கு எதிரான அனைத்து ராணுவ நடவடிக்கைக்கும் துணை நின்றார்.
இவர், ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கு எதிரான ராணுவ படை அமைத்த தளபதி அஹமது ஷா மசூத்தின் நெருங்கிய உதவியாளராக இருந்தவர்.
இவருக்கு தற்போது அமெரிக்கா ஆதரவு அளிக்கவில்லை, ஆகையால் அடுத்துவரும் அசம்பாவிதங்களை எதிர்கொள்ள அவர் விரும்பவில்லை. அஹமது ஷா மசூத் கொல்லப்பட்ட பின்னர் சலே எழுந்துநின்றார். அப்போது, அமெரிக்காவுக்கு அவர் தேவைப்பட்டார், தற்போது அமெரிக்கா கைவிட்டதால் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
2000ஆவது ஆண்டில் அம்ருல்லா சலே தலைமையிலான ஆப்கானியப் படைகள் தாலிபன்களுக்கு எதிராகப் போராட விரும்பின.
இதனை ஸ்டீவ் கோல் (Steeve Coll) தனது 'டைரக்டரேட் (Directorate)' என்ற புத்தகத்தில் நினைவு கூர்ந்துள்ளார். அம்ருல்லா சாலேக்கு ஜெர்மனியின் மூலம் அமெரிக்கா நிதியுதவி மற்றும் ராணுவ உதவி செய்தாலும், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் தஜிகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தாலும், அவரால் தாலிபன்களை ஒழித்துக்கட்டி முன்னேற முடியவில்லை.
மறுபுறம் செப்டம்பர் 11இல் நடைபெற்ற தாக்குதல் அமெரிக்காவை மாற்றியது. தாலிபன் மற்றும் அல்கொய்தா பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா தீவிரம் காட்டியது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அமெரிக்கா நேரடியாக களமிறங்கியது.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் 2011இல் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார். அதன்பின்னர், அமெரிக்காவின் முக்கிய நோக்கம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து, 'பயங்கரவாதத்திற்கு' எதிரான தங்கள் போராட்டத்தைத் தொடர அமெரிக்காவிற்கு பெரிய உந்துதல் இல்லை.
தாலிபன்களுக்கு எதிராக தினசரி சண்டைகள் குறித்து அவர்கள் எச்சரிக்கையாக இருந்தனர். இது அவர்களின் பொருளாதாரத்தை பாதித்தது.