தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / opinion

ஒரு சில நாடுகளின் கட்டுப்பாட்டில் சர்வதேச அமைப்பு! - பிரதமர் நரேந்திர மோடி

ஐக்கிய நாடுகள் சபை அதன் நம்பகத்தன்மையை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்றும், எனவே உண்மையான நோக்கத்துடன் அதனை செயல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்தார்.

world organisation
world organisation

By

Published : Oct 3, 2020, 5:13 PM IST

இரண்டாம் உலகப்போரின் பேரழிவுக்குப் பின்னர், உலக அளவில் அமைதியை உருவாக்கும் மனிநேயத்தின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு உருவெடுத்தது. இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் ஆண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கும் வேளையில் மறு சீரமைப்பு என்ற முக்கியமான கோரிக்கையும் கேட்கத் தொடங்கி இருக்கிறது.

25 ஆண்டுகளுக்கு முன்பு பொன்விழா கொண்டாட்டங்களின் போது, ஐநா சபையின் தலைவராக இருந்த பிரிட்டஸ் அமரல் இதே கோரிக்கையை எழுப்பினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 70 ஆண்டு விழா கொண்டாட்டங்களின்போது, 104 நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் சில நிரந்தர உறுப்பினர்களுக்கு மட்டும் வீட்டோ முன்னுரிமை கோட்பாடு இருந்தது பற்றி கேள்வி எழுப்பியது ஒரு பரபரப்பை உருவாக்கியது.

ஐக்கிய நாடுகள் சபை இன்னொரு சாதனையை அடைந்தபோது, முயற்சிகள் ஏதும் அற்ற சீரமைப்பு நடவடிக்கை செயல்பாடுகள், அதன் நம்பகத்தன்மையை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்றும், எனவே உண்மையான நோக்கத்துடன் அதனை செயல்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடியின் கருத்துகள் வெளியாயின.

அவரது ஆய்வு என்பது அதன் நீண்ட பயணத்தைக் கொண்டிருக்கிறது. பல்வேறு சாதனைகளை கடந்தப்போதிலும் ஐக்கிய நாடுகள் சபை, அதன் அடிப்படையான லட்சியத்தை இன்னும் அடையவில்லை. எனவே இதில் அவசரமான சீர்திருத்த நடவடிக்கை தேவை என்பதை அவர் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறார்.

அதன் பொன்விழா கூட்டங்களின்போது பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்வதற்கான வரைவு திட்டங்களை தாக்கல் செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சி தோல்வியைத் தழுவியது. இப்போது பொருளாதாரத்தில் வலுவான இரண்டு நாடுகளுடையே நிலவும் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உறுப்பு நாடுகளுக்குள் நட்பு ரீதியான சகோதரத்துவ உணர்வு மற்றும் பரஸ்பரம் ஒத்துழைப்பை மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ஐநா சபையின் தோல்விகளுக்கு இதைவிட சிறந்த ஆதாரம் இருக்க முடியாது. மாறுபட்ட நிலைமைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு கவுன்சிலை ஜனநாயகமயமாக்குவதிலும், உலக மயமாக்குவதிலும் வெற்றிபெறாவிட்டால் ஐ.நா-வின் இருப்பில் இனி அர்த்தம் இருக்காது.

கடந்த 75 ஆண்டுகளாக உலகின் முகம் என்பது மாறி வருகிறது. இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகள் வெற்றிபெற்றதில் இருந்து அளவுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து சீனாவுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது.

இன்றைக்கு ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகியவை தொடர்ந்து கடந்தகால மகிமையின் சின்னங்களாக இருக்கின்றன. தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப பல ஆண்டுகளாக ஐநா சபையை ஆட்சி செய்து வரும் அமெரிக்காவில் டிரம்ப்பின் வருகைக்குப் பின்னர் மதிப்பு மிக்க ஐ.நா சபை பல சிரமங்களுக்கு உட்பட்டுள்ளது என்பது நன்கு அறியப்பட்ட உண்மையாகும்.

சீனாவால் உருவாக்கப்பட்ட வீட்டோ அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதற்கான பதிவுக்கு போட்டி ஏதும் இல்லை. இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவை விருப்பம் தெரிவித்தாலும் கூட சீனா இதற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக அமரக்கூடாது என்பதுதான் அதன் ஒரே உத்தியாக இருக்கிறது. லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா ஆகியவற்றுக்கான பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர பிரதிநிதித்துவமாக சீனா ஒன்றுதான் என்று உருவாக்கப்பட்டிருப்பது முற்றிலும் நியாயமற்றதாகும்.

ஜப்பான், ஜெர்மனி, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கோரிக்கைகள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

கோவிட் பிரச்னை காரணமாக உலகம் பல்வேறு முகாம்களாக பிளவுப் பட்டிருக்கும் சூழலில் பன்முக அமைப்புகளுக்குள் இணக்கமான சூழ்நிலையை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details