ராஜபக்சவின் குடும்ப அரசியல் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா (SLPP) இப்போது பெற்ற பெரும் வெற்றியால் தேர்தல் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. இதனால் முன்னாள் நிர்வாகம் எடுத்த பல நடவடிக்கைகளை, குறிப்பாக 19வது அரசியலமைப்பு திருத்தம், மாற்றியமைக்க உள்ளது
புதிய அரசை அமைப்பதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்ச, நாட்டின் இரண்டு முறை அதிபரும் தனது மூத்த சகோதரருமான மஹிந்தாவிற்கு புதிய பிரதமராக 9ம் தேதி காலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (14) பவுத்த வழிபாட்டின் மிகவும் மதிப்பிற்குரிய இடமாகவும், கண்டி மன்னர்களின் கடைசி அரண்மனையுமான வரலாற்று சிறப்புமிக்க மாகுல் மடுவா அல்லது கண்டியில் உள்ள புத்தரின் பல் வைக்கப்பட்டுள்ள ஆலயத்தின் அரச பார்வையாளர் மண்டபத்தில், பதவியேற்றுக் கொள்ளும்.
அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் கோவிட் பாதிப்புக்குள்ளான தீவு பொருளாதாரத்தை மாற்றுவதற்கான செயல் திட்டம் என இரண்டு முன்னுரிமைகள் கொண்ட ஒரு புதிய அரசில் மேலும் மூன்று டஜன் துணை மற்றும் மாநில அமைச்சர்கள் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ளவிருந்தாலும், அமைச்சரவையின் எண்ணிக்கை 26க்கு மேல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது:
தீவின் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் கீழ், ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பட்சத்தில் 45 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை உருவாக்க முடியும். 19வது திருத்தத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று பரப்புரை செய்துள்ள SLPP, குறைந்தபட்சம் அதை ரத்து செய்யவோ அல்லது அதன் விதிகளை பயன்படுத்துவதை விட திருத்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தவோ ஆர்வமாக உள்ளது.
அதற்கு பதிலாக, SLPP தனது அரசியல் கூட்டணி கட்சிகள் இல்லாத ஒரு அமைச்சரவையை கொண்டிருக்க விரும்புகிறது, இதன் மூலம் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் சுதந்திரமான முடிவுகளை எடுத்து பலமான எதிர்க்கட்சி இல்லாத நாடாளுமன்றத்தில் அதன் செயல்திட்டங்களை முன்வைக்க நினைக்கிறது.
குடும்ப ஆட்சி
SLPP கட்சியினரின் கூற்றுப்படி, குடும்ப ஆட்சி என்பது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகத்தின் போர்வையில் இருந்தாலும், தேசிய நலனுக்கு, அதாவது பெரும்பான்மையினரின் நலனுக்கு, சேவை செய்ய முடியும் என்று ராஜபக்சக்களால் வாக்காளர்களை நம்ப வைக்க முடிந்தது;.
இலங்கையில் தேர்தல் முடிவுகள் வலதுசாரி அரசியலில் உலகளாவிய வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன, அங்கு தேர்தலில் வாக்களிக்க முடிவெடுப்பதில் தேசிய பாதுகாப்பு என்பது முன்னுரிமை பெறுவதோடு தேசியவாதம் பெரும் பங்கு வகிக்கிறது. இன-மத அடிப்படையில் வலுவாக பிளவுபட்டுள்ள ஒரு நாடு, தனி அரசியல் குடும்பத்தினருக்கு அதிகாரத்தை அதிக அளவில் அளித்ததையும், பெரும்பான்மையான மக்கள் அரசியல் அதிகாரத்தை அவர்களுக்கு அளிப்பதற்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லாத விருப்பத்தையும் இது குறிக்கிறது என்கிற விஷயம் இலங்கையை வேறுபடுத்துகிறது,
இருப்பினும் தேசியவாதம் மற்றும் பிரிவினை அதிகரித்து வருகிற போதிலும் இலங்கை மக்களின் பொதுத் தேர்தல் நடத்தைக்கு இது முற்றிலும் மாறுபட்டது. 1977ல் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) மகத்தான வெற்றியைத் தவிர, இலங்கை மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு போதிய பெரும்பான்மை மட்டுமே வழங்கியுள்ளனர், ஆனால் 2020ஆம் ஆண்டில், தீவிர தேசியவாதம், 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு குறித்த கவலைகள் மற்றும் பிரதான எதிர்க்கட்சி அரசியலை நிராகரிப்பது போன்ற காரணங்களால் இலங்கை பொதுஜன பெரமுனாவுக்கு (SLPP) முன்னெப்போதும் கண்டிராத வெற்றியை அளித்தது.
குடும்ப ஆட்சிக்கான பாதை
பிரதம மந்திரி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச ஆகஸ்ட் மாத தேர்தலில் மிகவும் வெற்றிகரமானவராக உருவெடுத்து, 527,364 வாக்குகளை பெற்றதன் மூலம் புதிய சாதனையை படைத்து, தீவின் மிகவும் பிரபலமான அரசியல் பிரமுகராக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், அவர்களில் நான்கு பேர் முன்னுரிமை பட்டியலில் உள்ளனர், மஹிந்த ராஜபக்ச (வடமேற்கில் உள்ள குருநாகலாவிலிருந்து), அவரது மகன் நமல் (பூர்வீக தென்கோடியில் உள்ள ஹம்பாந்தோட்டாவிலிருந்து) மற்றும் முதல் முறையாக போட்டியிட்ட, சஷீத்ரா ராஜபக்ச ( தென்கிழக்கில் மொனராகலாவிலிருந்து) மற்றும் நிபூனா ரனவகா (தெற்கில் மாதாராவிலிருந்து). மூத்தவர்கள் நிலையில், மஹிந்தா மற்றும் அவரது மூத்த சகோதரர் சாமல் (சஷீந்திராவின் தந்தை) இருவரும் உள்ளனர், அதைத் தொடர்ந்து அவர்களது சொந்த மகன்களும், அண்ணன் மகனும் இரண்டாவது நிலையில் உள்ளனர்.
மஹிந்தாவின் இளைய சகோதரரான கோத்தபய ராஜபக்ச, நவம்பர் மாதம் நாட்டின் நிர்வாகத் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
நடிகரிலிருந்து அரசியல்வாதியான ஜெயந்த கெதகோடாவுக்கு பதிலாக பாசில் ராஜபக்ச SLPPன் நியமன உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கட்சியினர் கூறுகின்றனர்.