உலக முதலீட்டாளர் மாநாடு
LIVE: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகம் ஈர்த்த முதலீடுகள் குறித்து முதலமைச்சர் சிறப்புரை! - முக ஸ்டாலின் லைவ்
<p><strong>சென்னை: </strong>2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதரதரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது.</p><p>இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் முதல்நாளான நேற்று, ஹூண்டாய், குவால்காம், பர்ஸ்ட் சோலார், கோத்ரெஜ், டாடா, பெகட்ரான், ஜேஎஸ்டபிள்யூ, டிவிஎஸ், மிட்சுபிஷி, ஏ.பி.மோலார் மெர்ஸ்க், வின் பாஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில், ரூ.50,634 கோடி முதலீட்டுக்கான புதிய ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. </p><p>இதன்மூலம் 49,550 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் துறைவாரியாக பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதனையடுத்து மாநாட்டின் நிறைவு நாளான இன்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மாநாடு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றி வருகிறார். அதன் நேரலை காட்சிகள்..</p>
Published : Jan 8, 2024, 4:40 PM IST
|Updated : Jan 8, 2024, 5:42 PM IST
Last Updated : Jan 8, 2024, 5:42 PM IST