உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: கோலாகலமான தொடக்க விழாவின் நேரலை..! - investors meet 2024

சென்னை: தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் நிறைந்த மாநிலமாக மாற்றும் நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு இன்று (ஜன.7) நடத்தும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க விழாவை நேரலையில் காணலாம்...

பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்கள், தொழில்நுட்ப ஜாம்பவான்கள், தொழில்முனைவோர், புத்தொழில் நிறுவனங்கள் எனத் தமிழ்நாட்டின் வணிகத்தளம் சிறந்து விளங்குகிறது. முதலீடுகளை மேலும் ஈர்த்து வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடத் தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-யை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

இன்று (ஜன.7) காலை 10 மணிக்குத் தொடங்க உள்ள இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு-உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024யை தொடங்கி வைத்துப் பேசுகிறார்.

இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆஸ்திரேலியா மற்றும் தமிழ்நாடு உறவு காட்சிப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவிலிருந்து எக்ஸ்போ பெவிலியனின் பகுதியிலிருந்து 80-க்கும் மேற்பட்ட முக்கிய பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் கலந்து கொள்ள அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published : Jan 7, 2024, 9:59 AM IST
|Updated : Jan 7, 2024, 12:52 PM IST
Last Updated : Jan 7, 2024, 12:52 PM IST