பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த பெருமத்தூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி தேன்மொழி(27). இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
#108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை - தாய்-சேய் நலம் - பெரம்பலூர் அரசு மருத்துவமனை
பெரம்பலூர்: அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 108 அவசர கால ஊர்தியில் வைத்து இளம் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
அவசர கால ஊர்தியிலே பிறந்த அழகான குழந்தை
இதனிடையே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 108 அவசர ஊர்தியில் வைத்து தேன்மொழிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து அவசர சிகிச்சைக்காக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.