தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

மாதவிடாய் காலங்களில் ரத்தப்போக்கை தவிர்க்க... இத செஞ்சு சாப்பிட்டு பாருங்க! - நிலக்கடலை

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை தவிர்க்கவும் சூடான, சுவையான நெய்யில் உருட்டிய கடலை உருண்டை உண்டுபாருங்கள். அப்போ தெரியும்...

File pic

By

Published : Mar 13, 2019, 6:07 PM IST

தேவையான பொருட்கள்

பச்சை நிலக்கடலை - 250 கிராம்

வெல்லம் - 250 கிராம்

நெய்-100 கிராம்

செய்முறை

250 கிராம் பச்சை நிலக்கடலையை வெறும் வாணலியில் நன்கு வறுக்க வேண்டும். பின்பு, அதனை ஒரு தட்டில் போட்டு ஆறவைக்கும்போதே, மிதமான சூட்டில் தோல் நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையடுத்து, 250 கிராம் வெல்லத்தை பொடிசெய்து வைத்துக்கொள்ளவும். பின்பு, மிக்சியில் நிலக்கடலையையும் பொடித்த வெல்லத்தையும் கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும். இரண்டையும் சேர்த்து அரைத்தால்தான் உருண்டைப் பிடிப்பதற்கு ஏதுவாக இருக்கும். வழுவழு என்று அரைக்கக் கூடாது.

அரைத்ததை எடுத்துக்கொண்டு, சிறிய, சிறிய உருண்டையாக நன்கு அழுத்திப் பிடித்து உருட்டவும். ஒருவேளை உருண்டை வரவில்லையென்றால், நெய்யை மிதமாக சூடேற்ற வேண்டும். பின்பு அந்த சூடான நெய்யில் மாவை சேர்த்து உருண்டைப் பிடிக்கவும்.

இதனை உண்பதால் ஏற்படும் பயன்கள்:

நிலக்கடலையில் புரதச் சத்து அதிகம் உள்ளது. இதில் உள்ள எண்ணெய்ச் சத்து ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். இந்த நிலக்கடலையுடன் வெல்லத்தைச் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

மேலும், நிலக்கடலையை பச்சையாக சாப்பிடாமல், தண்ணீரில் சில மணிநேரம் ஊறவைத்து சாப்பிடும்போதுதான், நமக்கு முழுபலனும் கிடைக்கிறது.

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கை தவிர்க்கவும் இதை சாப்பிடலாம்.

ABOUT THE AUTHOR

...view details