தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

மனிதனின் உயிரைக் குடிக்கும் கொடூரன்! உலக கொசுக்கள் தினம்...

மனிதனின் இறப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது கொசுக்கள், ஒரு ஆண்டிற்கு கொசுக்களால் மட்டும் 7 லட்சித்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வு கூறுகிறது. மனித உயிரை பறிக்கும் அரக்கனின் தினம் இன்று, உலக கொசுக்கள் தினம்...

World Mosquito Day

By

Published : Aug 20, 2019, 5:39 PM IST

மலேரியா என்ற நோய் உருவானதற்கு ஆனி வேராக இருந்தது கொசுக்கள் தான். அதனை கண்டுபிடித்து உலகுக்கு தெரியப்படுத்தியவர் ரொனால்டு ரோஸ். இவர் மலேரியா குறித்த ஆய்வை மேற்கொண்டார், மலேரியா என்கிற நோய் மனிதனுக்கு எப்படி தொற்றிக் கொண்டது. காற்றினால் வரக்கூடிய நோய் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கும் வேளையில், கொசுக்களினால் பரவுகிறது என்று கண்டுபிடித்தவர் ரொனால்டு. அதனை 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி உலகிற்கே தெரியப்படுத்தினார். அதனை நினைவுக்கூறவே ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20ஆம் தேதி உலக கொசுக்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக கொசுக்கள் தினம்

பெரும்பாலும் பெண் கொசுக்கள் தான் மனிதனை கடிக்கும், அவையே நோய்யை உருவாக்கக்கூடியது. அதிலும் மூன்று வகையான கொசுக்கள் தான் மனிதனின் உயிரை பறிக்கிறது. அவை அனாபெலஸ், ஏடிஸ், குளக்ஸ் ஆகிய மூன்றும் தான் கொடியத் தன்மை கொண்டவை. இந்த மூன்று வகையில் இருந்து தான் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, மூளைகாய்ச்சல், யானைக்கால் நோய் உள்ளிட்டவை உருவாகின்றன. உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மனிதனின் உயிரை எடுப்பதில் கொசுவிற்கு நிகர் கொசுவே.

கொசு குறித்து சுவாரஸ்ய தகவல்கள்!

  • பெண் கொசுக்கள் தான் மனிதனை கடிக்கும், அவையே அதிகம் முட்டை இடும் தன்மை கொண்டவை.
  • பொதுவாக கொசு கடிக்காது, அதற்கு பற்களே கிடையாது.
  • கொசுக்களால் வருடத்திற்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
  • மூன்றாயிறத்திற்கும் மேற்பட்ட கொசுக்கள் இனம் இருக்கிறது.
  • கொசுக்களின் ஆயுட்காலம் இரண்டு மாதங்கள் மட்டுமே.
  • கொசுவின் எதிரி தவளை, தவளை கொசுவை உணவாக சாப்பிடும்.
  • மனிதனின் உயிரை எடுப்பதில் கொசுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
    கொசுக்கள் தினம்

கொசுவிடம் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?

கொசு, தண்ணீர் அதிகம் தேங்கும் இடத்தில் தான் இருக்கும். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டால் கொசுக்கள் வராது. வீட்டிற்குள் கொசுக்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேப்ப இலையை காய வைத்து அதனை எரித்தால் வேப்ப இலையில் உள்ள கசப்பு தன்மைக்கு கொசுக்கள் வீட்டிற்குள் வராது. தண்ணீர் திறந்து வைக்கக்கூடாது, திறந்த வெளியில் வைத்தால் கொசுக்கள் அதிகம் வருவதற்கு வாய்ப்புண்டு. வீட்டைச் சுற்றி தோட்டங்கள் இருந்தால் மரம், செடி, இலைகளை சுத்தமாக, குப்பைகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது சுற்றி இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக் கொண்டால் கொசுக்கள் அண்டாது.

கொசுக்கள் நம்மை கடிப்பதற்கு சில சமயங்களில் நாமும் ஒரு முக்கிய காரணமாக இருப்போம். 'கொசுக்களிடம் இருந்து பாதுகாத்துக் கொண்டு அரக்கனை நெருங்க விடாமல் நம்மை நாம் தற்காத்து கொள்வோம்'...

ABOUT THE AUTHOR

...view details