தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

வெயில் காலங்களில் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை! - வெயில்

சித்திரை தொடங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிகமாகவுள்ளது. இக்காலத்தில் நாம் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என்ன?

கோடைக் காலம்

By

Published : Apr 2, 2019, 2:26 PM IST

கொளுத்தும் வெயிலில் நமது உடலின் நீர்ச்சத்து குறைவாக இருக்கும். இச்சமயத்தில் நீர்ச்சத்து அதிகம் சுரக்கும் பழங்கள், காய்கறிகள் உட்கொள்வது சிறந்தது. கோடை காலத்தில் வியர்வை அதிகம் வெளியேறும், வியர்வை வெளியேறுவதால் உடலின் நீர்ச்சத்து குறைந்து மயக்கம், சோர்வு, அதிக தாகம், நீர் கடுப்பு ஆகியவற்றை ஏற்படும்.

இவை அனைத்தையும் சீராக்குவதற்கு நாம் செய்ய வேண்டியவை

வியர்வை அதிகம் வெளியேறும் இக்கோடை காலத்தில் இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்கவும், பருத்தி ஆடைகளை அணிவதே சிறந்தது. நீர் அதிகம் குடிக்க வேண்டும், பழச்சாறு உள்ளிட்டவை எடுத்துக் கொள்ளவது சிறந்தது.

கோடைக் காலம்

உணவில் நீர் காய்களான பீர்க்கங்காய், வெண்பூசணி, சுரைக்காய், பீன்ஸ், வாழைத்தண்டு, அவரைக்காய், புடலங்காய் உள்ளிட்டவற்றை எடுத்து கொள்ளவும். இதனை உணவில் சேர்த்துக் கொண்டால் நீர்ச்சத்து குறையாமல் உடலை பார்த்துக் கொள்ளும்.

சோற்று கற்றாழை வெயில் காலங்களில் ஆகச் சிறந்த மருந்தாகும். இதனை வெறும் வயிற்றில் உட்கொண்டால் வயிறு பிரச்னைகள் சரியாகும். மேலும் கற்றாழையை தலைக்கு தேய்த்துக் குளித்தால் உடல் உஷ்ணம், தலைச்சூடு குறையும். இதில் அதிக குளிர் தன்மை உள்ளதால் உடலில் உள்ள சூடு தணிந்து, புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

மேலும் வாரத்தில் ஒருநாள் தலையில் நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடலின் சூடு தணியும். வெப்பத்தால் ஏற்படும் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியவற்றை தவிர்க்கலாம். விளக்கெண்ணெய் எடுத்துக் கொண்டாலும் உடல் சூடு தணியும்.

பழங்களில் மாதுளை, தர்ப்பூசணி, வெள்ளரிப்பழம், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை பழமாகவோ அல்லது பழச்சாறாகவோ எடுத்துக் கொள்ளலாம். தினசரி ஒரு வேளை எடுத்துக் கொண்டாலே உடலில் உள்ள நீர்ச்சத்து அதிகமாகி உடல் சூடு குறையும்.

கோடைக் காலம்

தவிர்க்க வேண்டியவை

வெயில் காலத்தில் காரம், உப்பு, புளிப்பு, எண்ணெய் பலகாரங்கள், உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்து கொள்ளாமல் இருக்கவும். அதிக காரமான அல்லது எண்ணெய் பலகாரங்களை எடுத்துக் கொண்டால் உடலின் சூட்டை அதிகப்படுத்தி அஜீரணக் கோளாறு ஏற்படச் செய்யும்.

மேலும் உடலில் உள்ள நீரின் அளவு வெயில் காலங்களில் குறைவதால்தான் சளி, இருமல், தும்மல், மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கோடை காலங்களில் முடிந்தவரை அதிகம் நீர்ச்சத்து நிறைந்த அல்லது நீர் ஆகாரம் உள்ள பொருட்களை உணவில் எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள சூடு தணிந்து ஆரோக்கியமாக நமது அன்றாட வேலைகளை சோர்வின்றி செய்து முடிக்கலாம்.

ABOUT THE AUTHOR

...view details