தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

உங்கள் குழந்தை எப்பவும் சோர்வாக இருக்கிறதா? ராகி லட்டு செஞ்சு கொடுங்க - Ragi special

பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய, சுவையான ராகி லட்டை இப்படி செய்துகொடுத்துப் பாருங்கள். குழந்தைகள் இனி 'ராகி லட்டு வேண்டும்' என்று என அடம்பிடிப்பார்கள்.

Ragi special

By

Published : Mar 12, 2019, 2:47 PM IST

தேவையான பொருட்கள்

ராகி மாவு - 250கிராம்

பனைவெல்லம் (அ) வெல்லம் - 200 கிராம் (பொடியாக்கியது)

நெய் - 100கிராம்

கிஸ்மிஸ், முந்திரிப்பருப்பு - 10

தேங்காய்த்துருவல் - சிறிதளவு

உப்பு - சிறிதளவு

செய்முறை

முதலில் 250 கிராம் வெல்லத்தை நன்கு பொடியாக்கி, மிக்சியில் போட்டு, பொடியாக வரும்வரை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு, வாணிலியில் ராகி மாவை போட்டு, நன்கு அதை வதக்க வேண்டும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து மாவின் நிறம் சற்று மாறும்வரை சுமார் 15 நிமிடங்கள் வதக்கவும். பின்பு அதனை ஒரு தட்டில் ஆறவைக்க வேண்டும்.

பின்பு, தேங்காய்த் துருவலையும் வாணலியில் சேர்த்து வதக்க வேண்டும். (நீண்ட நேரம் கெடாமல் இருப்பதற்கு வதக்கவும்)

ஒரு டீஸ்பூன் நெய்யில் கிஸ்மிஸ், முந்திரி சேர்த்து போட்டு எடுத்துக் கொள்ளவும். ராகி மாவு, கிஸ்மிஸ், முந்திரி, வதக்கிய தேங்காய்த்துருவல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.

இதையடுத்து, 100 கிராம் நெய்யை மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும். பின்பு, இந்த நெய்யில் ராகி மாவு கலவையை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து லட்டு போல் உருண்டைப் பிடிக்கவும். (தேவைக்கேற்ப நெய் அதிகமாகவும் சேர்த்துக் கொள்ளலாம்).

இந்த ராகி லட்டு ஒருநாள் வரை கெடாமல் இருக்கும். மேலும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், ஒரு வாரம் கெடாமல் இருக்கும்.

பயன்கள்:

ராகியில் உள்ள இரும்புச்சத்தானது, உடலில் ஏற்படும் ரத்த சோகையை குணப்படுத்துவதோடு, அக்குறைபாடு வராமல் தடுக்கும்.

ராகி மாவில் செய்யப்படும் கலி, புட்டு, இடியாப்பம், லட்டு போன்ற அனைத்து உணவுகளையும் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் தினமும் உண்டு வந்தால், உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தி உள்பட பல நல்ல பலன்களை நமக்குக் கொடுக்கிறது.

எனவே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் இதை தினந்தோறும் உணவில் எடுத்துக்கொண்டால், ஆரோக்கியத்துடனும், நலமுடனும் வாழலாம்.

ABOUT THE AUTHOR

...view details