டெல்லி: கரோனா தொற்றைக் கண்டறியும் புதிய கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
ரேப்பிட் ஆன்டிஜன் முறையில் பரிசோதனை முடிவை வழங்கும் இக்கருவியை புனேவைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 'மைலாப் டிஸ்கவரி சொலியூஷ்ன்ஸ்' எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. கோவிசெல்ஃப் டிஎம் (பாத்தோகாட்ச்), கோவிட் -19 ஓடிசி ஆன்டிஜென் எல்எஃப் "CoviSelfTM(PathoCatch) COVID-19 OTC Antigen LF" என்பது இதன் பெயராகும்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டவர்கள் இந்த பரிசோதனை முறையைத் தெரிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்தே கரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களுக்காக வழிகாட்டுதல் மேலும், அறிகுறிகள் இருந்தும் இந்த பரிசோதனையில் தொற்று இல்லை என கண்டறிந்தால், உடனடியாக பரிசோதனை நிலையம் சென்று ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆர்) அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான கைபேசி செயலியையும் ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் சோதனை வழிகாட்டுதல்கள் பயனாளிகளுக்கு கிடைக்கும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.