தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

ஆரோக்கியமான பாதையில் இந்தியாவின் ஆரோக்கியம்! ஆயுஷ்மன் பாரத் குறித்து அறிந்திடுங்கள்... - ஆயுஷ்மான் பாரத் என்றால் என்ன

நம் நாட்டில் உயரும் செலவீனங்கள், ஏற்றத் தாழ்வுகள் ஆகிய சவால்கள் இருந்தபோதிலும், நாம் இன்னும் மலிவான விலையில் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பில் மனநிறைவு அடையாமல் இருக்கிறோம் என்பதே  உண்மை. சுகாதார காப்பீட்டை விரிவுபடுத்துவதற்கான யுக்திகளை மறுபரிசீலனை செய்வதற்கும், காப்பீட்டுத் தொகை தேவைப்படுபவர்களுக்கும், தகுதியான மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதற்கான நேரம் இது.

Ayushman Bharath The Uphill Ahead, ஆயுஷ்மன் பாரத், ஆயுஷ்மன் பாரத் என்றால் என்ன, what is ayushman bharath
ஆயுஷ்மான் பாரத் என்றால் என்ன

By

Published : Dec 18, 2019, 5:44 PM IST

சுகாதார காப்பீட்டின் பற்றாக்குறை இந்தியாவில் ஏழைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்கும் வகையில், ஒரு பிரபலமான ஆங்கில செய்தி நாளேடு, 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி ஒரு முக்கியமானச் செய்தியை வெளியிட்டது. சமீபத்தில் வெளியிடப்பட்ட என்எஸ்எஸ் 75ஆவது சுற்றின் (2017-18) சமூக நுகர்வுக்கான புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

ஏழைக் குடும்பங்களுக்கு உடல்நலக் காப்பீடு இல்லாததால், தாம் அனுதினம் சம்பாதித்து சேமித்த பணத்திலிருந்து செலவழித்தோ அல்லது கடன் வாங்கியோ, சுகாதாரத்திற்கான அவர்களின் செலவுகளைச் சமாளிப்பதையும் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் நாம் காண முடிந்தது. தற்செயலாக, இச்செய்திக்கு வருவதற்கு முந்தைய நாளான டிசம்பர் 10, 2019 அன்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி சவுபே மாநிலங்களவையில் சில தகவல்களை பகிர்ந்திருந்தார்.

மருத்துவக் காப்பீட்டு கொள்கையில் பயன்தரும் புதிய விதிகள்: அறிந்து கொள்ளுங்கள்!

அதில், பாரத் பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் மூலம் (ஏபி-பி.எம்.ஜே.ஏ) டிசம்பர் 5, 2019 வரை மையத்தின் முதன்மை திட்டமான ஆயுஷ்மன் பாரத்தின் கீழ் கிட்டத்தட்ட 65 லட்சம் நோயாளிகளுக்கு 9,549 கோடி ரூபாய் செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, ஒரு பெரிய மக்கள்தொகையை குறுகிய காலத்தில் அடைந்தது, உண்மையில் ஒரு பாராட்டுக்குரிய சாதனையாகத் தான் பார்க்கவேண்டும்.

சுகாதார அமைச்சகம்

தினசரி நாளேட்டின் செய்தியும், மாநிலங்களவையில் அமைச்சரின் அறிக்கையும், இந்த அம்சத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கியமான காரணிகளை முன்வைக்கிறது. அவை,

  • இந்தியாவில் சுகாதார காப்பீடு
  • இரண்டாவது நாம் எதைச் சாதித்திருக்கிறோம்

நாம் செய்ய வேண்டியதை முதலாவது நமக்கு நினைவூட்டுகிறது. இந்திய அரசு அதன் வழியில் எதிர்கொள்ளும் சவால்களில் முன்னேற, இந்த மதிப்புமிக்க திட்டத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வது பொருத்தமானதாக இருக்கும்.

ஆயுஷ்மன் பாரத்தின் முதல் படி:

ஆயுஷ்மன் பாரத் என்று அழைக்கப்படும் 'பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா அபியான்', பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் பிறந்த நாளுக்கு முன்னதாக 2018, செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கப்படும் என 2018ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்த திட்டம் தேசிய சுகாதார பாதுகாப்பு பணி (AB-NHPM) அல்லது மோடியின் பராமரிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் என்றும் புகழப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வீதம் இரண்டாம், மூன்றாம் நிலை மருத்துவப் பராமரிப்பு வசதிகளுக்காகக் கொடுக்கப்படுகிறது. இதற்கு பயனாளிகளின் தகுதியாக சமூக - பொருளாதார கணக்கெடுப்பை (எஸ்.இ.சி.சி) அடிப்படையாகக் கொண்டு பார்க்கப்படும். இத்திட்டம் தொடங்கப்பட்ட பிறகு அரசுக்கு பெரும் சவால்கள் எழுந்திருக்கும் நிலையில், அதனை கவனமாக கையாள வேண்டிய சூழல் நிலவியுள்ளது.

எதிர்நோக்கி இருக்கும் சவால்கள்:

இத்திட்டதில் அரசு எதிர்கொள்ளும் முக்கிய சவால் ஊழலின் அச்சுறுத்தல். இத்திட்டம் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவர தொடங்கின. இது தொடர்பான அறிவிப்புகள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் சுகாதார அமைச்சர் எடுத்துரைத்திருந்தார். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 1,200 மருத்துவமனைகள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அதில் 376 மருத்துவமனைகள் குறித்து விசாரணைகள் நிறைவடைந்து, இதுவரை 6 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 1,200 மருத்துவமனைகள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அதில் 376 மருத்துவமனைகள் குறித்து விசாரணைகள் நிறைவடைந்து, இதுவரை ஆறு எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன

இது தவிர, அபராதம் விதிக்கப்பட்டு, 1.5 கோடி ரூபாய் பல்வேறு மருத்துவமனைகளிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து 97 மருத்துவமனைகள் இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளின் ஊழல் தொடர்பான ஆழமான சிக்கல்களை மட்டுமே எடுத்துக்காட்டுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி

ஊழலை தாண்டி நிற்கும் கட்டண கொள்ளை:

ஊழலைத் தவிர, இரண்டாவது பிரச்னை தனியார் மருத்துவமனைகளுடன் தொடர்புடையது. இது இரு துருவங்களாக சித்தரிக்கப்படுகின்றன. ஒரு புறம் தனியார் மருத்துவமனையில் சந்தை விகிதங்களின்படி இத்திட்டத்தின் மூலம் சில சிகிச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை மிகவும் குறைவு என்று குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் மறுபுறம் சில ஆய்வுகள் இத்திட்டதின் மூலம் சிகிச்சைகாக ஒதுக்கப்பட்டிருக்கும் 71 சதவிகிதம் தனியார் மருத்துவமனைகள் 25 படுக்கைகளுக்கு குறைவாகவே உள்ள மருத்துவமனைகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் - மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

இந்த வகை விசித்திரமான பிரச்னைகளுக்கு தமிழ்நாடு சிறந்த தீர்வை வழங்குகிறது. இது ஒரு வலுவான பொது சுகாதார அமைப்புக்கு வழி வகுக்கும். பொதுத்துறை சுகாதாரப் பாதுகாப்பு வலுவாக இருக்கும்போது, பல்வேறு சுகாதார சேவைகளுக்கான விலைகள் குறித்து தனியார் துறையுடன் பேரம் பேசுவதில் அரசாங்கங்கள் அதிக அக்கறை கொண்டிருக்கும். இது தனியார் துறைக்கும் அதிக பலனளிக்கும்.

மறுபுறம், மலிவு விலையில் சிறந்த சேவைகளை வழங்குவதற்காக தனியார் துறையும் பொதுத்துறையுடன் போட்டியிடும். இறுதியில் இவற்றின் மூலம் சாதாரண குடிமக்கள் பெரும் பலனடைவார்கள். இதன் விளைவாக, தனியார் மருத்துவமனைகளுக்கு மொத்த தொகையை செலுத்துவதற்குப் பதிலாக அவர்களுக்கு ஒரு பெரிய தொகை வழங்கப்படும். இது இறுதியில் பொதுத்துறையின் நலன்மிக்க நோக்கங்களுக்கும், தனியார் துறையின் லாபம் ஈட்டும் ஆசைகளுக்கும் இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த உதவுகிறது.

விழிப்புணர்வு வேண்டும்:

மூன்றாவது சவால் விழிப்புணர்வு பரப்புரைகள் மூலமாகவும், தேவையான கட்டமைப்போடு அவர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலமாகவும் பயனாளிகள் மத்தியில் அவர்களின் உரிமையை உணரவைக்க முடியும். அந்த வழியில் சுகாதார அட்டையை உருவாக்கி இந்திய அரசாங்கம் ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. மேலும், கருத்துக்களை (feedback) பகிரும் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகள் ஒழுங்குமுறைக்கு வழி வகுக்கும்.

ஆயுஷ்மன் பாரத் திட்டத்தால் எதிர்கொள்ளப்படும் நான்காவது சவாலாக, நிறுவன அமைப்பில் ஒரு பெரிய தளத்தின் தேவையும், அவர்கள் செய்ய வேண்டிய செலவுகளைச் சந்திப்பதும் தான். உதாரணமாக, இந்த திட்டத்தின் செயல்படுத்தல் திட்டத்தின் படி, 2022 நிதியாண்டில் ஒரு லட்சத்து 20,000 சமூக சுகாதார அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அதே காலகட்டத்தில் ஒரு லட்சத்து 50,000 சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவத் தேர்வு முறைகேடு: மற்றுமொரு மருத்துவக் கல்லூரி தேர்வு மைய அங்கீகாரம் ரத்து

பொருளாதார வளர்ச்சி 5 சதவீகிதத்திற்கும் குறைவாகக் குறைந்துவிட்ட இந்த நேரத்தில் இந்தச் செலவைச் சந்திப்பது பெரும் சவாலாக இருக்கும். வளர்ச்சி விகிதம் ஏறக்குறைய ஏழு முதல் எட்டு சதவிகிதம் வரை இருந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட இரண்டு சதவிகிதம் செலவு செய்தாலே அத்தகைய இலக்குகளை அடையலாம் . இப்போது பொருளாதார மந்தநிலையின் பின்னணியில், திட்டத்தின் குறிக்கோள்களை அடைய நிதிகளைத் திரட்டுவது ஒரு கடினமான பணியாகும்.

மருத்துவ சிகிச்சை (கோப்புப் படம்)

மறுபுறம், மாநிலங்கள் சுகாதாரத்திற்கான செலவினங்களை பூர்த்தி செய்வதில் தனிச்சிறப்பை கொண்டுள்ளன. இருப்பினும் அவர்களும் தற்போதைய பொருளாதார மந்தநிலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் நிலையில், சில மாநிலங்கள் தங்கள் நிதி நிலையில் சிக்கலை சந்தித்து வருகின்றன.

பொருளாதார வளர்ச்சி 5 சதவீகிதத்திற்கும் குறைவாகக் குறைந்துவிட்ட இந்த நேரத்தில் இந்தச் செலவைச் சந்திப்பது பெரும் சவாலாக இருக்கும்.

இச்சூழலில்தான், இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பில் பட்டியலிடப்பட்ட 195 நாடுகளில் 145ஆவது இடத்தில் உள்ளது என்பதை ‘லான்சென்ட்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிரியா, வட கொரியா போன்ற நாடுகளை விட சுகாதாரப் பாதுகாப்பின் அடிப்படையில் இந்தியாவின் நிலை மோசமானது என்றும், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையை விட தரத்தில் குறைவானது என்றும் தெரிவித்துள்ளது.

ஆன்ட்டிபயாட்டிக் உள்ளிட்ட 12 வகையான மருந்துகளின் விலை 50 சதவிகிதமாக உயர்வு!

இத்தகைய சுகாதாரப் பாதுகாப்பு முறை இருப்பதால், தரமான சுகாதார வசதிகளை வழங்குவது ஒரு கடினமான பணியாகும். இதற்கு முதலில் சுகாதாரத் துறைக்கு ஒரு பெரிய நிதி தேவைப்படுகிறது. 2025ஆம் ஆண்டளவில் பொது சுகாதாரத்திற்கான செலவினங்களை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவிகிதமாக உயர்த்துவதை இந்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு சதவிகிதத்திலிருந்து தொலைவிலுள்ளது.

மேலும், இந்தியா அதன் பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு கட்டத்தில் இருப்பதும் ஒரு பெரிய சவால். அதிகரித்துவரும் செலவினத்தை சமாளிப்பதற்கும், அதற்கு நிதியளிப்பதற்கும் முதலீடுகளை ஈர்ப்பது அவசியம். இது மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் நிலையில், இவ்வேளையில் பல யுக்திகளை கையாண்டு, அவர்கள் திறன்பட செயலாற்ற வேண்டும்.

அச்சுறுத்தும் இறுதி சவால்...

ஐந்தாவது சவால் என்பது சுகாதாரத்திற்காக எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை பொறுத்தது அல்ல; அதன் தரம், அமைப்பு மற்றும் அத்தகைய செலவினங்களிலிருந்து இறுதியில் பயனாளிகள் எவ்வளவு பயன்பெற்றார்கள் என்பதே முக்கியம். எளிமையாகச் சொல்வதானால், எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்ற கேள்வியை விட அது எதற்காகச் செலவிடப்படுகிறது, யாருக்காக செலவிடப்படுகிறது என்பதுதான் முக்கியமானது.

அமெரிக்க ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

இந்தியாவில் சுகாதாரப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான கொள்கைகளை அவர்கள் வடிவமைக்கும்போது, சுகாதார பாதுகாப்பில், சமூக, பொருளாதார மற்றும் மக்கள் தொகை ஆகியவற்றில் பயனாளிகளுக்கு இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை அறிக்கைகள் சுட்டிக்காட்ட வேண்டும். இச்சூழலில் நாம் இறுதியாக சொல்ல வேண்டியது என்னவென்றால், கடந்த ஒரு வருடத்தில் நாம் செய்த சாதனைகளைப் பற்றி நாம் பெருமைப்பட்டாலும் , இதில் மனநிறைவு அடையாமல் இருக்கிறோம் என்பதே உண்மை. இத்திட்டத்தின் வரம்புகளை விரிவுபடுத்துவதற்கான யுக்திகளை மறுபரிசீலனை செய்வதற்கும், காப்பீட்டுத் தொகை, தேவைப்படுபவர்களுக்கும் தகுதியான மக்களுக்கும் சென்றடைவதை உறுதிசெய்வதற்கான நேரம் இது.

தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓ சா உடன் மோடி

தாய்லாந்து வழி காட்டுகிறது:

தாய்லாந்தின் யுனிவர்சல் ஹெல்த் கேர், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு முக்கியமான படிப்பினைகளை வழங்குகிறது. தாய்லாந்தின் 68 மில்லியன் மக்களுக்கு 927 அரசு மருத்துவமனைகள், 363 தனியார் மருத்துவமனைகள், 9,768 அரசு சுகாதார நிலையங்கள், 25,615 தனியார் கிளினிக்குகள் மூலம் சேவைகளை வழங்குகின்றன. உலக வங்கியின் கூற்றுப்படி, தாய்லாந்தின் சுகாதாரத் திட்டங்களின் கீழ், மக்கள் தொகையில் 99.5 சதவிகிதத்தினர் சுகாதாரப் பாதுகாப்பை பெற்றுள்ளனர். இது 2001ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, பின்னர் பல மேம்பட்ட நெறிமுறைகளின் மூலம் தற்போது வரை வீரியமாக மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.

தாய்லாந்தின் சுகாதாரத் திட்டங்களின் கீழ், மக்கள் தொகையில் 99.5 சதவிகிதத்தினர் சுகாதாரப் பாதுகாப்பை பெற்றுள்ளனர்

அதன் ஒரு பகுதியாக, சிகிச்சைக்காக வசூலிக்கப்படும் குறைந்த கூட்டு கட்டணத்திற்கு ஏற்ப, 30 பாட் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் சேருபவர்களுக்கு தங்க அட்டை வழங்கப்படுகிறது . இது அவர்களின் மாவட்டத்தில் சுகாதார சேவைகளுக்கு அணுகவும், தேவைப்பட்டால் வேறு இடங்களில் சிறப்பு சிகிச்சைக்காக பரிந்துரைக்கவும் அனுமதிக்கிறது.

யுனிவர்சல் ஹெல்த் கேர் மூன்று திட்டங்கள் மூலம் வழங்கப்படுகிறது:

  1. அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான சிவில் சர்வீஸ் நலன் அமைப்பு,
  2. தனியார் ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்பு
  3. உலகளாவிய பாதுகாப்பு திட்டம்

தாய்லாந்தில் சுகாதார நிதியின் பெரும் பங்கு, பொது வருவாயிலிருந்து மட்டுமல்லாமல் தனியார் மூலமாகவும் வருகிறது. மக்கள் தொகையின் அடிப்படையில் தான் வருடாந்திர நிதி ஆரம்பச் சுகாதார பராமரிப்புக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உயரும் செலவீனங்களும், ஏற்றத்தாழ்வுகளின் சவால்களும் இருந்தபோதிலும், தாய்லாந்து இன்னும் மலிவான விலையில் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பின் அரசனாக உள்ளது. நடுத்தர நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.

ABOUT THE AUTHOR

...view details