தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

Latest Tech News: நிமிடம் ஒன்றுக்கு 525 யூனீட்கள் என்று காலியான சியோமி! - தீபாவளி விற்பனை

நடைபெற்று முடிந்த தீபாவளி விற்பனையில் சுமார் 53 லட்சம் யூனிட்கள் விற்றுள்ளதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

Xiaomi

By

Published : Oct 6, 2019, 7:56 PM IST

Latest Tech News தசரா, தீபாவளி உள்ளிட்ட வரவிருக்கும் பண்டிகை நாட்களை முன்னிட்டு ஃபிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் தீபாவளி விற்பனையை அறிவிருந்திருந்து. கடந்த சில நாட்களாக நடைபெற்றுவந்த இந்த தீபாவளி சிறப்பு விற்பனையில் புதிய சாதனையைப் படைத்துள்ளதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சியோமி தரப்பில் வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், "இந்த வருட விற்பனையில் ஸ்மார்ட்ஃபோன்கள், எம்ஐ டிவி, எம்ஐ பவர் பேங் என மொத்தம் 53 லட்சம் சியோமி சாதனங்கள் விற்பனையாகியுள்ளது. விற்கப்பட்டதில் 38 லட்சம் ஸ்மார்ட்ஃபோன்களும் இரண்டரை லட்சம் எம்ஐ டிவிகளும் அடங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மியின் புதிய ஸ்மார்ட்ஃபோன் மாடலான ரெட்மி நோட் 7 இந்த விற்பனையில் அதிகமாக விற்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையில் 25 லட்சம் சியோமி சாதனங்கள் விற்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அதன் விற்பனை இரட்டிப்பாகியுள்ளதாகவும் அதற்கு சியோமி ரசிகர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளது. சியோமி தகவலின்படி ஒரு நிமிடத்துக்கு 525 சியோமி சாதனங்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கலாமே: வாட்ஸ்அப்பின் அடுத்த அதிரடி - வாயைப் பிளந்த பயனாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details