தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

சியோமி மி 11 லைட்: அழகான, ஸ்டைலான, க்யூட்டான ஸ்மார்ட்போன்! - gadgets news tamil

சியோமி மி 11 லைட் ஸ்மார்ட்போன், உலகளவில் முதன்முறையாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 780ஜி புராசஸர் உடன் மூன்று நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Global smartphone, Xiaomi, Xiaomi Mi 11 Lite, Xiaomi Mi 11 lite Features, Xiaomi Mi 11 lite specifications, Xiaomi India,  smartphone, சியோமி மி 11 லைட், மி 11 லைட், கைபேசி செய்திகள், ஸ்மார்ட்போன் செய்திகள், டெக் செய்திகள், technology news tamil, gadgets news tamil, சியோமி மி 11 லைட் சிறப்பம்சங்கள்
சியோமி மி 11 லைட்

By

Published : Jun 21, 2021, 10:31 PM IST

சியோமி மி 11 லைட்: புதிய ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் ஜூன் 22ஆம் தேதி வெளியாகிறது.

சியோமி நிறுவனத்தின் பிறப்பிடமான சீனாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் முன்னதாக வெளியாகின. இந்நிலையில், டஸ்கேனி பவளம், ஜாஸ் நீலம், வினைல் கறுப்பு ஆகிய மூன்று நிறங்களில் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் சந்தைப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இதன் 8ஜிபி + 128ஜிபி ரகம் 2,299 யுவானுக்கும் (ரூ. 26,415 உத்தேச விலை), 8ஜிபி + 256ஜிபி ரகம் 2,599 யுவானுக்கும் (ரூ. 29,860 உத்தேச விலை) சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்சங்களுக்கு குறைவில்லை... ஜியோனியின் அசத்தலான ஸ்மார்ட் வாட்சுகள்!

சியோமி மி 11 லைட் சிறப்பம்சங்கள்

  • 6.55 அங்குல முழு அளவு எச்டி+ அமோலெட் தொடுதிரை / 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரஷ் ரேட்
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 780ஜி புராசஸர்
  • முன்பக்கம் 20 மெகா பிக்சல் பஞ்ச் ஹேல் படக்கருவி
  • பின்பக்கம் 64 மெகா பிக்சல் முதன்மை சென்சார், 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைட், 5 மெகா பிக்சல் மேக்ரோ என மூன்று படக்கருவிகள்
  • 4250 எம்ஏஎச் மின் சேமிப்புத் திறன் / 33 வாட் ஆதரவுடன் விரைவாக சார்ஜ் செய்யும் வசதி
  • நிறங்கள்:டஸ்கேனி பவளம், ஜாஸ் நீலம், வினைல் கறுப்பு
  • விலை:8ஜிபி + 128ஜிபி ரகம் ரூ. 26,415 (உத்தேச விலை) / 8ஜிபி + 256ஜிபி ரகம் ரூ. 29,860 (உத்தேச விலை)

ABOUT THE AUTHOR

...view details