தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

மோட்டோ ஜி9: சிறப்பம்சங்கள் என்னென்ன? - மோட்டோ ஜி9

மோட்டோ ஜி8 ரக கைபேசிக்கு அடுத்தபடியாக வெளியாகும் மோட்டோ ஜ9 ஸ்மார்ட்போன் ஆனது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட ட்ரிபிள் ரியர் படக்கருவி அமைப்பு, 20W அதிவிரைவு மின்னூக்கி, பெரிய 6.5 இன்ச் தொடுதிரை போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

மோட்டோ ஜி9
மோட்டோ ஜி9

By

Published : Aug 24, 2020, 7:55 PM IST

மோட்டோரோலாவின் புதிய கைபேசியான மோட்டோ ஜி9 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லெனோவாவுக்குச் சொந்தமான இந்நிறுவனத்தின் மோட்டோ ஜி ரக பட்டியலில் வெகு நாட்களுக்கு பிறகு இடம்பெறும் கைபேசி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மோட்டோ ஜி 9 கைபேசியின் விலை 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு திறனை கொண்டது ரூ.11,499 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஃபாரஸ்ட் பச்சை, சபையர் நீலம் ஆகிய இரண்டு தனித்துவமான வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாராகும் புதிய ஐபோன் எஸ்இ; விலை குறையுமா?

மோட்டோ ஜி 9 கைபேசியின் சிறப்பம்ச விவரங்கள்:

  • இரட்டை சிம் ஆதரவு (நானோ) கொண்ட மோட்டோ ஜி 9 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 கொண்டு இயங்குகிறது
  • 6.5 இன்ச் அளவிலான எச்டி + மேக்ஸ் விஷன் டிஎஃப்டி தொடுதிரை, 20: 9 என்கிற திரை விகிதம், 87 % ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் கொண்டுள்ளது.
  • ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC, 4 ஜிபி எல்பிடிடிஆர் 4 ரேம் கொண்டுள்ளது.
  • மூன்று பின் பக்க படக்கருவி அமைப்பில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சாரைக் கொண்டுள்ளது, இது எஃப் / 1.7 லென்ஸைக் கொண்டுள்ளது, இது குவாட் பிக்சல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனுடன் எஃப் / 2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் | எஃப் / 2.4 மேக்ரோ லென்ஸுடன் 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவைகளும் உள்ளன.
    மோட்டோ ஜி9
  • முன்பக்கத்தை படக்கருவியில் 8 மெகாபிக்சல் படக்கருவி சென்சார் உள்ளது. அது எஃப் / 2.2 லென்ஸுடன் வருகிறது
  • 64 ஜிபி உள் சேமிப்புத் திறன் உள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடியது (512 ஜிபி வரை).
  • வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆகிய இணைப்பு வசதிகள் உள்ளன.
  • உணரிகளை பொறுத்தவரை, அக்செலெரோமீட்டர், கைரோஸ்கோப், ஆம்பியண்ட் லைட், ப்ராஸிமிட்டி சென்சார் ஆகியவை உள்ளது
  • 5,000mAH மின்கல திறன் கொண்டுள்ளது

ABOUT THE AUTHOR

...view details