ஒருவர் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்அப் மூலம் அவரை எளிதில் தொடர்பு கொள்ளலாம். இதனாலேயே உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சாட்டிங் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது.
இருப்பினும், வாட்ஸ்அப் செயலியில் பயனாளர்கள் விரும்பும் சில வசதிகள் இன்னும் சேர்க்கப்படவில்லை. குறிப்பாக ஒரே நேரத்தில் ஒரு வாட்ஸ்அப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்தும் வசதியை பயனாளர்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஒரு வாட்ஸ்அப் கணக்கை ஒரே சமயத்தில் நான்கு சாதனங்களிலிருந்து பயன்படுத்தும் புதிய வசதியை, வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது சோதனை செய்து வருவதாக WABetaInfo தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. வைஃபை மூலம் கணக்கின் தகவல்கள் மற்ற சாதனங்களுக்கு பகிரப்படும் வகையில் இந்த வசதி இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.