வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளைப் புதிய அப்டேட்டில் சரி செய்துள்ளது. கடந்த வருடம் வாட்ஸ்அப்பின் சோதனை வடிவத்தில் இந்த அம்சம் பரிசோதிக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு மொபைல்களில் இந்த வசதியை அறிமுகம் செய்யத் திட்டமிருந்தது. தற்போது ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ் என அனைத்து இயங்கு தளங்களிலும் வாட்ஸ்அப் செயலியில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நாம் மற்றவர்களுக்கு அனுப்பும் மெசேஜ்கள் ஏழு நாள்களுக்குப் பின்னர் தானாகவே டெலீட் செய்யப்படும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளது. இதனைப் பயன்படுத்த செட்டிங்ஸ்சில் கூடுதலாக ஒரு வசதி இணைக்கப்படுகிறது.