தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

'அமெரிக்காவை பிற நாடுகள் பின்பற்றாது..! - ஹூவாய் சிஇஓ உறுதி - other countries

பெய்ஜீங்: "ஹூவாய் நிறுவனத்தை புறக்கணிக்கும் வகையில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவின் செயலை மற்ற நாடுகளும் பின்பற்றும் என்று கருதவில்லை" என, தலைமை செயல் அலுவலர் தெரிவித்தார்.

ஹூவாய் சி.இ.ஓ

By

Published : May 26, 2019, 9:14 PM IST


சீனாவுடன் வர்த்தக போர் நீடித்து வரும் நிலையில், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா திடீரென உயர்த்தியுள்ளது. இதனிடையே நாட்டின் தொழில்நுட்ப துறையில், அவசர நிலையையும் பிரகடனப்படுத்தியுள்ள அமெரிக்காவின் செயலால், சீனாவைச் சேர்ந்த ஹூவாய் நிறுவனமும் சரிவைச் சந்திக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹூவாய் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ரென் ஜெங்பே, "ஹூவாய் நிறுவனத்தை புறக்கணிக்கும் முயற்சியில் ஈடுபடும் அமெரிக்காவின் செயலை, மற்ற நாடுகளும் பின்பற்றும் எனக் கூற முடியாது. பல்வேறு நாட்டு பிரதிநிதிகளுடன், தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். ஒவ்வொரு நாடும் பிரத்யேகமான முடிவுகளை கொண்டுள்ளது", என்றார்.

ABOUT THE AUTHOR

...view details