தென் கொரியா தகவல் சாதனங்கள் தயாரிப்பு ஜாம்பவானான சாம்சங் நிறுவனம், புகைப்பட உணரிகளை உருவாக்கியுள்ளது. இந்த புகைப்படக் கருவியின் உணரிகளானது, மனித பார்வையை விட துல்லியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இதன் திறன் 600 மெகா பிக்சல்களை கொண்டிருக்கும் என்று கூறியிருக்கும் நிறுவனம், பயனர்கள் எடுக்கும் புகைப்படத்தின் மணம், குணம், சுவை என அனைத்தையும் உணரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
ரியல்மி நர்சோ செல்போன் அறிமுகம் மீண்டும் ஒத்திவைப்பு!
மனிதர்களின் அன்றாட வாழ்வியல் நடைமுறைகளை இந்த உணரிகள் எடுத்துக்கொள்ளுமாம். படக்கருவிகளுக்கு உணரிகள் தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக திகழும் சாம்சங், மே 2019ஆம் ஆண்டு தனது முதல் அதிதிறன் கொண்ட 64 மெகா பிக்சல் உணரிகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.
ட்ரிபிள் ரெயின்டிராப் கேமராவுடன் வெளிவரும் எல்ஜி 5ஜி வெல்வெட்!
அதனைத் தொடர்ந்து 6 மாதங்கள் கழித்து 108 மெகா பிக்சல்களை கொண்ட படக்கருவி உணரிகளை, தனது பிரதான படைப்பான காலக்ஸி எஸ்20 அல்ட்ரா (Samsung Galaxy S20 Ultra) கைப்பேசி மூலம் சந்தைக்கு கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.