சியோல் (தென் கொரியா) :அதிவேகத் திறன் கொண்ட 5nm எக்ஸ்சினோஸ் 1080 மெல்லிய அடுத்த தலைமுறை நடுத்தர கைபேசி சிப்செட்டை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய 5nm எக்ஸ்சினோஸ் 1080 சிப்செட்!
சாம்சங் நிறுவனம் தனது 5nm எக்ஸ்சினோஸ் 1080 மெல்லிய அடுத்த தலைமுறை நடுத்தர கைபேசி சிப்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 200 மெகா பிக்சல் அல்லது இரண்டு 32 மெகா பிக்சல் படக்கருவிக்கான ஆதரவை அளிக்கும். மேலும், நொடிகளுக்கு 60 பிரேம்களைக் கொண்ட 4K காணொலிக்கான ஆதரவையும் வழங்குகிறது.
Samsung Exynos 1080
முன்னதாக இதன் வெளியீட்டு விழாவில், விவோ கைபேசிகளில் இந்த சிப்செட் 2021இல் வெளிவரும் என்று சாம்சங் நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது.
சாம்சங் எக்ஸ்சினோஸ் 1080 ஆதரவளிக்கும் அம்சங்கள்
- 90 ஹெர்ட்ஸ் அல்லது 144 ஹெர்ட்ஸ் முழு அளவு எச்.டி+ திரை
- 200 மெகா பிக்சல் அல்லது இரண்டு 32 மெகா பிக்சல் படக்கருவி
- ஆக்டாகோர் 2.6 அல்லது 2.8 ஜிகா ஹெர்ட்ஸ் திறன்
Last Updated : Nov 14, 2020, 4:07 PM IST