தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

MWC 2021: சிறந்த ஸ்மார்ட்போன் விருது வென்ற சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா! - செல்பி கேமரா

பிரபல ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வான மொபைல் வேல்ட் காங்கிரஸ் 2021இன் (MWC 2021) சிறந்த ஸ்மார்ட்போனுக்கான விருதை சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம் ரக ஃபோனான கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா தட்டிச் சென்றுள்ளது.

சாம்சங் கேலக்சி எஸ்21 அல்ட்ரா
சாம்சங் கேலக்சி எஸ்21 அல்ட்ரா

By

Published : Jul 3, 2021, 4:15 AM IST

சியோல் (தென் கொரியா):மொபைல் வேல்ட் காங்கிரஸ் 2021இன் சிறந்த ஸ்மார்ட்போனுக்கான விருது, சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா கைபேசிக்கு கிடைத்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம் ரகத் தொகுப்பில் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.1,05,000 க்கும், அதன் 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட் ரூ.1,16, 999க்கும் இந்தாண்டு ஜனவரி மாதம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,05,999 ஆக சாம்சங் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இது டிவியா இல்ல... உங்களை பிரம்மிப்பில் ஆழ்த்தும் சாம்சங் 'தி ஃபிரேம் டிவி'

சாம்சங்கேலக்ஸிஎஸ்21 அல்ட்ராஸ்மார்ட்போன்சிறப்பம்சங்கள்:

  • ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் அடிப்படையிலான ஒன் யுஐ
  • மேம்பட்ட 6.8 அங்குல எட்ஜ் கியூஎச்டி + ஓலெட் தொடுதிரை (1,440x3,200 பிக்சல்கள்) டைனமிக் அமோலேட் 2 எக்ஸ் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே
  • எச்டிஆர் 10 + ஆதரவு மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • 10 ஹெர்ட்ஸ் வரை குறைக்க முடியும்
  • எஸ் பென் ஆதரிக்க வாக்கோம் தொழில்நுட்பம்
  • உலகளாவிய சந்தைகளில் சாம்சங் நிறுவனத்தின் பிரத்யேக ஆக்டா கோர் எக்ஸினோஸ் 2100 SoC / அமெரிக்காவில் ஸ்னாப்டிராகன் 888 5ஜி
  • 12 ஜிபி / 16 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம்
  • பின்பக்கம் 4 படக்கருவிகள் - 108 மெகாபிக்சல் சென்சார் (எஃப் 1.8 லென்ஸ் ஓஐஎஸ் ஆதரவுடன் / எஃப் 2.2 லென்ஸுடன் 12 மெகாபிக்சல் டூயல் பிக்சல் சென்சார், எஃப் 2.4 டெலிஃபோட்டோ லென்ஸ் ஓஐஎஸ் ஆதரவுடன் 10 மெகாபிக்சல் சென்சார் / எஃப் 4.9 டெலிஃபோட்டோ லென்ஸ் ஓஐஎஸ் ஆதரவுடன் மற்றொரு 10 மெகாபிக்சல் சென்சார்.
  • 40 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா (எஃப் 2.2 லென்ஸ்)
  • 128 ஜிபி / 256 ஜிபி / 512 ஜிபி சேமிப்பு திறன்
  • 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6 இ, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
  • அனைத்து விதமான சென்சார்களுடன் புதிதாக அல்ட்ராசோனிக் சென்சார்
  • 5,000 எம்ஏஎச் பேட்டரி
  • யூ.எஸ்.பி பி.டி 3.0 மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
  • அளவீட்டில் 165.1x75.6x8.9 மிமீ
  • எடையில் 229 கிராம்

ABOUT THE AUTHOR

...view details