ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மொபைல் நெட்வொர்க்கில் கோளாறு ஏற்பட்டுள்ளதால், கால் வசதி, இணைய சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என்று பயனர்கள் பலர் ட்விட்டரில் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதில் சிலர் ஜியோ நிறுவன ட்விட்டர் கணக்கை டேக் செய்து குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பான #jiodown என்ற ஹேஷ்டேக் இன்று ட்விட்டரில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது. இதில் ஒரு பயனாளருக்கு பதிலளித்த ஜியோ நிறுவனம் “உங்கள் இருப்பிடத்தில் இணையச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எங்கள் தொழில்நுட்பக்குழு இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. விரைவில் சேவைகள் மீட்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.