இந்தியாவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, தனது இணை நிறுவனமான ரெட்மி நிறுவனத்தின் நோட் சீரிஸில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்களை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அப்போது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கரோனா பரவல் காரணமாக உற்பத்தியில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ரெட்மி நோட் 9 வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், நான்கு கேமரா, 5020mah பேட்டரியுடன் ரெட்மி நோட் 9 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் எல்இடி டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
- 48 மெகா பிக்சல் முதன்மை கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 13 மெகாபிக்சல் கேமரா
- பாதுகாப்பிற்கு கொரில்லா கிளாஸ் வசதி
- 5020mah பேட்டரி
- ஆண்டிராய்டு 10 மையமாகக் கொண்டு இயங்கும் எம்ஐயுஐ 11 இயங்குதளம்