சீனாவின் ஹூபே மாகாணத்தில் முதலில் பரவிய கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தற்போது அந்நாடு முழுவதும் மிக வேகமாக பரவிவருகிறது. இதனால் சீனாவின் பல முக்கிய பகுதிகள் முடங்கியுள்ளதால், அந்நாட்டு பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில் விற்கப்படும் மொபைல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்கள் சீனாவில்தான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதேபோல, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில், பெரும்பாலானவை சீனாவில் உற்பத்தி செய்யப்படுவதால், சீனாவின் இந்த பாதிப்பால் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. இதன் வெளிப்பாடாக, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் நிறுவனமான ரெட்மி தனது ரெட்மி நோட் 8 மொபைலின் விலையை உயர்த்தியுள்ளது.