சீன நிறுவனமான ரெட்மி பொதுவாக மிக வலிமையாக இருப்பது மிட்ரேன்ஜ் எனப்படும் 15,000 - 20,000க்குள் இருக்கும் ஸ்மார்ட்ஃபோன் வரிசையில்தான். டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ரெட்மி தனது அடுத்த பாய்ச்சலாக Redmi Note 8 Pro என்ற புதிய மொபைலை வெளியிட்டுள்ளது.
- 6.53 இன்ச் IPS எல்இடி டிஸ்பிளே
- MediaTek Helio G90T பிராசஸர்
- 64 மெகாபிக்சல் கேமரா+ 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மைக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 20 மெகாபிக்சல் வாட்டர் டிராப் கேமரா
- 4,500mah பேட்டரி
- 18w ஃபாஸ்ட் சார்ஜ் வசதி
- பாதுகாப்புக்கு முன்புறமும் பின்புறமும் கொரில்லா க்ளாஸ் 5
- வெள்ளை, கறுப்பு, பச்சை ஆகிய நிறங்களில் கிடைக்கவுள்ளது
தற்போது இந்த Redmi note 8 pro ஆண்ட்ராய்டு 9 பை-ஐ மையமாக வைத்து ரெட்மி உருவாக்கிய MIUI 10 இயங்குதளத்தைக் கொண்டு இயங்கினாலும் வரும் டிசம்பர் மாத இறுதியில் MIUI 11 அப்டேட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.