தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

ரெட்மியின் புகழ்பெற்ற இந்த மொபைல் இனி வராது - அதிர்ச்சியில் ரசிகர்கள் - ரெட்மி கே 30

ரெட்மி நிறுவனத்தின் புகழ்பெற்ற Redmi K20 pro ஸ்மாடர்ட்போன்களின் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Redmi K20 Pro to Be Discontinued
Redmi K20 Pro to Be Discontinued

By

Published : Feb 9, 2020, 9:02 PM IST

ரெட்மி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் (அதிக விலைகொண்ட ஸ்மார்ட்போன்) வரிசையில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த மாடல் Redmi K20 pro. ரூ. 25 ஆயிரத்திற்கு வெளியான இந்த ஸ்மார்ட்போன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த Redmi K20 pro மாடல் கடந்த ஆண்டு (2019) மே மாதம் சீனாவில் வெளியானது. இந்நிலையில் சீனாவின் பிரபல சமூக வலைதளமான வைபோவில் ரெட்மியின் மேலாளர் லு வெய்பிங், "இம்மாத இறுதியுடன் Redmi K20 pro நிறுத்திக்கொள்ளப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

Redmi K20 pro ஸ்மார்ட்போன் வெளியாகி இன்னும் ஒரு ஆண்டுகூட ஆகாத நிலையில், அந்நிறுவனத்தின் அறிவிப்பு ரெட்மி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரெட்மியின் இந்த அறிவிப்பு சீனாவுக்கு மட்டும் பொருந்துமா அல்லது இந்தியாவிலும் Redmi K20 pro நிறுத்திக் கொள்ளப்படுமா என்பது குறித்து தெளிவான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

இதையும் படிங்க:‘தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும்'

ABOUT THE AUTHOR

...view details