தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

ரியல்மீ X - 20,000க்குள்ளான ஒரு சிறந்த மொபைல்? - new mobile

இந்த மாத ஆரம்பத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மீ X இன்று மதியம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

ரியல்மீ X

By

Published : Jul 24, 2019, 11:49 AM IST

ஓப்போவின் ரியல்மீ 2018ஆம் ஆண்டு முதல் தனி மொபைல்ஃபோன் நிறுவனமாகச் செயல்படத் தொடங்கியது. அதன் பிறகு வெளியிட்ட 10,000-13,000 ரூபாய் விலைப்பிரிவில் ரியல்மீ 2 ப்ரோ, ரியல்மீ 3 ப்ரோ என்ற மாடல்கள் எல்லாம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ரியல்மீ நிறுவனம் 15,000-20,000 ரூபாய் விலைப்பிரிவில் தனது ஆதிக்கத்தைப் பெருக்க ரியல்மீ X மொபைல்ஃபோனை இந்த மாத ஆரம்பத்தில் வெளியிட்டது.

6.53 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளோவையும் இன்டிஸ்பிளோ ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்ட இது கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சத்தையும் கொண்டது. 191 கிராம் எடையுள்ள இந்த மொபைல்போன் ஸ்னாப்டிரகன் 710 பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. மேலும் ஆண்டிராய்ட் 9 பையை மையமாக வைத்து ஓப்போ உருவாக்கியுள்ள கலர் 6.0 இயங்குதளத்தில் இந்த ஃபோன் இயங்குகிறது.

ரியல்மீ X

ரியல்மீயின் முதல் பாப்-அப் செல்ஃபி கேமராவைக் கொண்ட இது 16 மெகபிக்சல் முன்புற கேமராவைக் கொண்டது. பின்புறம் சோனி ஐ.எம்.எக்ஸ் 586(Sony IMX 586) சென்சாரின் 48 மெகாபிக்சல் கேமரா 5 மெகாபிக்சல் கேமரா என இரட்டை கேமரா வசதியைக் கொண்டது. 3765mah பேட்டரியைக் கொண்ட இது அதிவேகமாக சார்ஜ் செய்ய வசதியாக ஓப்போவின் வூக் (VOOC) சார்ஜ் வசதியையும் பெற்றுள்ளது.

ரியல்மீ X

போலார் வைய்ட், ஸ்பேஸ் ப்ளூ என் இரு வேறு நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஃபோனின் அறிமுக சலுகையாக ரூ. 1,500க்கு மோபி க்விக் சூப்பர்கேஷும் ரூ.7000க்கு ஜியோ கூப்பனும் வழங்கப்படுகிறது. 4ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்புத் திறனைக் கொண்ட மொபைல் ரூ.16,999க்கும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்புத் திறனைக் கொண்ட ரூ. 19,999க்கும் விற்கப்படவுள்ளது.

விற்பனை குறித்து ரியல்மீ நிறுவனத்தின் ட்வீட்

இந்த மொபைல் இன்று மதியம் சரியாக 12 மணிக்கு ஃப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மீயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. 15,000-20,000 ரூபாய் விலைப்பட்டியலில் ரெட்மீ நோட் 7 ப்ரோ, போக்கோ எஃப் 1 ஆகிய மொபைல்ஃபோன்களுக்கு கடும் போட்டியைத் தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ABOUT THE AUTHOR

...view details