தமிழ்நாடு

tamil nadu

குவியும் ஆர்டர்கள்... திணறும் ரியல்மி!

By

Published : May 5, 2020, 2:15 PM IST

டெல்லி: அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தனது விற்பனையைத் தொடங்கியுள்ள ரியல்மி நிறுவனத்திற்கு அதிகளவில் ஆர்டர்கள் வந்துள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Realme
Realme

இந்தியாவில் கோவிட்-19 பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசியப் பொருள்களைத் தவிர மற்ற பொருள்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பச்சை, ஆரஞ்சு பகுதிகளில் அத்தியாவசியமற்ற பொருள்களின் விற்பனையைத் தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து, பச்சை மற்றும் ஆரஞ்சு பகுதிகளில் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தொடங்கியுள்ளன. அந்தவகையில் ரியல்மி நிறுவனமும் மே 4ஆம் தேதி முதல் தனது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையைத் தொடங்கியது.

இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் அதிகளவில் எங்களுக்கு ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன. தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க தொடங்கும்வரை எங்களிடம் போதுமான அளவுக்கு கையிருப்பு உள்ளது" என்று கூறினார்.

மேலும், உத்தரப் பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையை மீண்டும் இயக்க அனுமதி தர வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு ரியல்மி வேண்டுகோள் விடுத்திருந்தது. இது தொடர்பாக அவர் கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தில் எங்களுக்கு அனுமதி கிடைத்தால், அங்கு Narzo சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்களையும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

அதுமட்டுமின்றி, ஊரடங்கு காரணமாக அனைத்து ரியல்மி சாதனங்களின் வாராண்டிக்களும் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கோவிட்-19 பரவல் காரணமாக Narzo சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை ரியல்மி நிறுவனம் தற்காலிகமாகத் தள்ளிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன் தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி அளித்தால், வழக்கமாக உற்பத்தி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையில் 30 விழுக்காட்டை மே மாத இறுதிக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்று இந்தியா செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:வீட்டைவிட்டு வெளியே வராமல் போன் வாங்கலாம் - விவோவின் புதிய திட்டம்

ABOUT THE AUTHOR

...view details