தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

நார்சோ - புதிய சீரிஸ் ஸ்மார்ட் போனை வெளியிட்ட ரியல்மி - நார்சோ 10A

ரியல்மி நிறுவனம் நார்சோ 10, நார்சோ 10 A என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.

Realme Narzo 10
Realme Narzo 10

By

Published : May 12, 2020, 4:53 PM IST

ஓப்போவின் இணை நிறுவனமாகத் தனது பயணத்தை தொடங்கிய ரியல்மி வெகு விரைவில் தனி நிறுவனமாகச் செயல்படத் தொடங்கியது. பிரபல சீன நிறுவனமான ரெட்மி நிறுவனத்திற்கு கடும் போட்டியை தந்துகொண்டிருக்கும் ரியல்மி நிறுவனம் தற்போது நார்சோ 10, நார்சோ 10 A என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளன.

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த ஸ்மாட்ர்போன் வெளியீட்டு விழாவில் பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இணையதளம் வழியே ஸ்மார்ட்போன் வெளியீடு ஒளிபரப்பப்பட்டது.

ரியல்மி நார்சோ 10A சிறப்புகள்

  • 6.52 இன்ச் டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ G70 பிராசஸர்
  • பின்புறம் 12 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 5 மெகாபிக்சல் கேமரா
  • 5000mah பேட்டரி
  • பாதுகாப்பிற்குக் கொரில்லா க்ளாஸ் வசதி
  • ஆண்ட்ராய்டு 10ஐ மையாகக் கொண்டு இயங்கும் ரியல்மி இயங்குதளம்

விலை

3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 8,499

ரியல்மி நார்சோ 10A ஸ்மார்ட்போன் வரும் மே 22ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

ரியல்மி நார்சோ 10 சிறப்புகள்

  • 6.5 இன்ச் டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ G80 பிராசஸர்
  • பின்புறம் 48 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 16 மெகாபிக்சல் கேமரா
  • 5000mah பேட்டரி
  • பாதுகாப்பிற்கு கொரில்லா க்ளாஸ் வசதி
  • ஆண்ட்ராய்டு 10ஐ மையாக கொண்டு இயங்கும் ரியல்மி இயங்குதளம்

விலை

4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 11,999

ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் வரும் மே 18ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: பணத்தை ஏழைகள் கையில் கொடுங்கள் - நோபல் பரிசு வென்ற எஸ்தர் டஃப்லோ

ABOUT THE AUTHOR

...view details