தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

Latest Tech News ரெட்மியை வீழ்த்திய ரியல்மி! - latest tech seithigal

இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் பயனாளிகளை  திருப்திப்படுத்தும் மொபைல்களில் ரெட்மி நிறுவனத்தை ரியல்மி நிறுவனம் முந்தியுள்ளது.

Realme

By

Published : Sep 20, 2019, 2:10 PM IST

Latest Tech News - இந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தை சில வருடங்களாக கடும் போட்டியை சந்தித்துவருகிறது. இந்திய ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் முதலிடத்திலிருக்கும் ரெட்மி நிறுவனத்துக்குப் போட்டியாகச் சென்ற ஆண்டு ரியல்மி என்ற புது ஸ்மார்ட்ஃபோன் பிராண்டைத் தொடங்கியது ஓப்போ. அது பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இந்நிலையில், சைபர்-மீடியா ரிசர்ச் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், பயனாளிகளைத் திருப்திப்படுத்துவதில் ரெட்மி பின்னடைவை சந்தித்துள்ளது. தோற்றம் மற்றும் வடிவமைப்பில் பயனர்களைத் திருப்திப்படுத்துவதில் விவோ நிறுவனம் (99%) முதலிடத்திலும் அதைத் தொடர்ந்து ஓப்போ, ரியல்மி நிறுவனங்கள் (98%) இரண்டாவது இடத்தை பெற்றுள்ளன. சியோமி (97%) நிறுவனம் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

மொபைல் நம்பகத்தன்மை என்று வரும்போது, ​​ரியல்மி (90%) முதலிடத்திலும் சாம்சங் (88%) இரண்டாவது இடத்திலும் விவோ (87%) மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:ரியல்மியின் புதிய ஸ்மார்ட்ஃபோன் Realme XT

ABOUT THE AUTHOR

...view details