ரவண்டா நிறுவனம் மாரா X (Mara X) மற்றும் மாரா Z (Mara Z) என்று இரண்டு ஸ்மார்ட்ஃபோன் மாடல்களை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்பேன் மாடல்கள்தான் ஆப்பிரிக்காவிலேயே தயாரிக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் மாடல்கள் என்று கூறியுள்ளார் ரவண்டா நிறுவனத் தலைவர் பால் ககாமே.
மேலும் அவர், ஏற்கனவே சில ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்கள் எகிப்து, எத்தியோபியா, அல்ஜீரியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை அசெம்பில் (Assemble) செய்தாலும், அவற்றின் மூலப்பொருட்களான மதர் போர்ட்(Mother Board) உள்ளிட்டவை இறக்குமதியே செய்யப்பட்டு வருவதாகவும் ஆனால் இந்த ஸ்மார்ட்ஃபோன் மாடல்களின் அனைத்து பகுதிகளும் ஆப்பிரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் கூறினார்.