குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 712 புராசசர் ஆனது இடைப்பட்ட பயனர்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் அலைபேசிக்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்நாப்ட்ராகன் 710 பிராசசரின் அப்கிரேட் லெவல் ஆகும். 712 பிராசசர் 10 என்.எம். பிராசசஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்களுடன் தயாராகும் குவால்கோம் - fast
ஒரு அலைபேசியின் அடிப்படை செயல்பாடு என்பது அதன் பிராசசர் மற்றும் ரேம் செயல்பாட்டினைக் கொண்டுதான் இயங்குகிறது. தற்போது வெளியாகும் ஸ்மார்ட் அலைபேசிகளில், அதிக அளவு குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் புரொசசர் பயன்படுத்தப்படுகிறது.
சென்ட்ரல் பிராசஸிங் யூனிட்டின் (CPU) திறன் வேகமானது 2.2GHz முதல் 2.3GHz வரை அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த பிராசசர் அலைபேசியின் ஒட்டுமொத்த அளவிலான 10 சதவீதம் செயல்பாட்டினை அதிகரிக்கும் என்று நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக 710 பிராசசர் நோக்கியா 8.1, லெனோவோ Z5எஸ், ஓப்போ ஆர்17 புரோ ஆகிய அலைபேசிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 710 பிராசசரைப் போலவே 712 பிராசசர் குயிக் சார்ஜ் 4+ தொழில் நுட்பத்தை ஆதரிக்கும். இந்த பிராசசர் ஸ்நாப்ட்ராகன் X15 LTE மோடமுடன் வெளியாக உள்ளதால் இதன் தரவிறக்கத்தின் ஆற்றல் 800 Mbps ஆக இருக்கும் என கூறப்படுகிறது.