சீனாவைச் சேர்ந்த பிரபல ஓப்போ நிறுவனம் ரெனோ 4 ப்ரோ என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
பின்புறம் நான்கு கேமரா, 4000mah பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே, 65w ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல அட்டகாசமான வசதிகளுடன் ஓப்போ நிறுவனம் புதிய ஓப்போ ரெனோ 4 ப்ரோ என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. 65w ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 0இல் இருந்து 100% சார்ஜை வெறும் 36 நிமிடங்களில் அடைய முடியும்.
ஓப்போ ரெனோ 4 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.50 இன்ச் அமோலெட் டிஸ்பிளே
- 90Hz டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
- 48 மெகா பிக்சல் முதன்மை கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
- முன்புறம் 32 மெகாபிக்சல் கேமரா
- பாதுகாப்பிற்கு கொரில்லா கிளாஸ் வசதி
- 4000mah பேட்டரி
- 65w ஃபாஸ்ட் சார்ஜ் வசதி
- ஆண்டிராய்டு 10 மையமாகக் கொண்டு இயங்கும் கலர் ஓஎஸ் 7.2 இயங்குதளம்