தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

அதிதிறன் கொண்ட குறைந்த விலை போக்கோ எம்2 ப்ரோ வெளியீடு...! - POCO m2 pro launched online

சியோமி நிறுவனத்தில் இருந்து தனியாக தன்னை நிலை நிறுத்திக்கொண்ட போக்கோ நிறுவனம் தனது போக்கோ எம்2 ப்ரோ எனும் கைப்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்னாப்டிராகன் 720ஜி செயல்திறன், 48 மெகா பிக்சல் படக்கருவி, 5000mAh மின்கலத் திறனைக் கொண்டு நடுத்தர விலையில் தகவல் சாதன சந்தைக்கு வந்துள்ளது.

poco m2 pro
போக்கோ எம்2 ப்ரோ

By

Published : Jul 8, 2020, 8:47 PM IST

ஹைதராபாத்: போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எம்2 ப்ரோ கைப்பேசி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய போக்கோ எம்2 ப்ரோ கைப்பேசியில் 6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் தொடுதிரை, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

போக்கோ எம்2 ப்ரோ

இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 48 எம்பி முன்பக்கப் படக்கருவி, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்பி பின்பக்க படக்ருவி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் செயலியைத் தொடங்கிவைத்த வெங்கையா நாயுடு

போக்கோ எம்2 ப்ரோ சிறப்பம்சங்கள்

  • 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் தொடுதிரை
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
  • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் உடன் அட்ரினோ 618 GPU
  • 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) சேமிப்புத் திறன் | 6 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) சேமிப்புத் திறன்
  • சேமிப்புத் திறனை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • டூயல் சிம்
  • ஆண்ட்ராய்டு 11 பீட்டா பதிப்பு மற்றும் MIUI 11
  • 48 எம்பி பின்பக்கப் படக்கருவி, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ், EIS | 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் | 5 எம்பி 2cm மேக்ரோ லென்ஸ் | 2 எம்பி டெப்த் சென்சார்
  • 16 எம்பி முன்பக்கப் படக்கருவி
  • பக்கவாட்டில் கைரேகை உணரி
  • 3.5எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டூயல் மைக்ரோபோன்
  • சிறிதளவு நீர் பாதுகாப்பு (P2i coating)
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
  • யுஎஸ்பி டைப்-சி
  • 5000mAh மின்கல சேமிப்புத் திறன்
  • 33 வாட் அதிவிரைவு மின்னூக்கி

நிறங்கள்

  • அவுட் ஆஃப் புளூ
  • கிரீன் அண்ட் கிரீனர்
  • டூ ஷேட்ஸ் ஆஃப் பிளாக்

ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

தும் தும்... கூடுதல் பாஸ் தொழில்நுட்பத்துடன் வெளியான சோனியின் இயர்பட்ஸ்!

போக்கோ எம்2 ப்ரோ விலை நிலவரம்

  • 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999
  • 6 ஜிபி+64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999
  • 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999

என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய போக்கோ எம்2 ப்ரோ கைப்பேசி விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 14 ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details