சியோமி நிறுவனத்தின் இணை நிறுவனமாகத் தொடங்கப்பட்ட போக்கோ தற்போது தனி நிறுவனமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் 2018ஆம் ஆண்டு போக்கோ எஃப் 1 என்ற தனது முதல் ஸ்மார்ட்போனை வெளியிட்டது.
இந்த ஸ்மார்ட்போனுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இருப்பினும் 2019ஆம் ஆண்டு முழுவதும் இந்த ஸ்மார்ட்போனை பற்றி எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் போக்கோ ரகசியம் காத்து வந்தது. ஒரு வழியாக மவுனத்தைக் கலைத்த போக்கோ, இந்தாண்டு தொடக்கத்தில் போக்கோ எக்ஸ் 2 என்ற ஸ்மார்டபோனை வெளியிட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று போக்கோ எஃப் 2 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. சீனாவில் மார்ச் மாதம் வெளியான ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன்தான் தற்போது போக்கோ எஃப் 2 ப்ரோ என்ற பெயரில் சர்வதேச அளவில் வெளியாகியுள்ளது.
போக்கோ எஃப் 2 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.67 இன்ச் அமோலெட் டிஸ்பிலே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- 64 மெகா பிக்சல் முதன்மை கேமரா + 13 மெகா பிக்சல் கேமரா + 5 மெகா பிக்சல் கேமரா + 2 மெகா பிக்சல் கேமரா
- முன்புறம் 20 மெகா பிக்சல் பாப்அப் கேமரா
- பாதுகாப்பிற்கு கொரில்லா கிளாஸ் வசதி
- 4700mah பேட்டரி
- ஆண்ட்ராய்டு 10 மையமாகக் கொண்டு இயங்கும் எம்ஐயுஐ 11 இயங்குதளம்