தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

இன்று விற்பனைக்கு வரும் ஓப்போவின் புதிய மொபைல்!

ஓப்போவின் புதிய மொபைல் ஃபோன் மாடலான ஓப்போ கே 3 இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

ஓப்போ கே 3

By

Published : Jul 23, 2019, 10:03 AM IST

Updated : Jul 23, 2019, 2:27 PM IST

6.5 இன்ச் அமோலெட் (AMOLED) தொடுதிரையைக் கொண்ட ஓப்போ கே 3 சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 710 பிராசஸரைக்கொண்டது. திரை பாதுகாப்பிற்கு கொரில்லா கிளாஸையும் கொண்ட இது, இன்டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் வசதியையும் பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 9 பையை மையமாக வைத்து ஓப்போ உருவாக்கியுள்ள கலர் 6.0 இயங்குதளத்தில் இது இயங்குகிறது. 3,765mah பேட்டரியைக் கொண்டுள்ள இந்த மொபைலை வேகமாக சார்ஜ் செய்துகொள்ள வசதியாக ஓப்போவின் வூக் (VOOC) சார்ஜ் வசதியையும் பெற்றுள்ளது.

ஓப்போ கே 3

கேமராவைப் பொறுத்தவரைப் பின்புறம், 16 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் கேமரா என இரட்டை கேமரா வசதியை பெற்றுள்ளது. முன்புறம் இருக்கும் நாட்சை நீக்க ஓப்போவும் பாப் அப் செல்ஃபி கேமராவை பயன்படுத்தியுள்ளது. 16 மெகாபிக்சல் முன்புற பாப் அப் செல்ஃபி கேமராவால் 6.5 இன்ச் டிஸ்பிளேவை பயனாளர்கள் முழுமையாக ரசிக்க முடியும்.

ஓப்போ கே 3

அரோரா ப்ளூ, ஜேட் ப்ளாக் என்று இருவேறு நிறங்களில் இந்த மொபைல்ஃபோன் வெளியாகவுள்ளது. 6ஜிபி ரேம், 64ஜிபி சேமிப்புத் திறனையும் கொண்ட மெபைல் ரூ.16,990க்கும் 6ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்புத் திறனையும் கொண்ட மொபைல் ரூ.19,990க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

அறிமுக விற்பனை சலுகையாக ஆக்ஸிஸ் பேங் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்களுக்கு ரூ. 1000 சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது. மேலும் ரூ. 7,050 மதிப்புள்ள ஜியோ கூப்பனும் ரூ. 5000க்கு லென்ஸ்கார்ட் கூப்பனும் 12,000க்கு ஓயோ கூப்பனும் இந்த அறிமுக விற்பனையில் வழங்கப்படுகின்றன. இந்த மெபைல்ஃபோன் அமேசான் இணையதளத்தில் சரியாக பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது.

விற்பனை குறித்து ஓப்போ நிறுவனத்தின் ட்வீட்

அமோலாய்ட் டிஸ்பிளே, இன்டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், பாப் அப் செல்ஃபி கேமரா என்று பல வசதிகளைப் பெற்ற இது, 20,000க்கும் குறைவான விலையுள்ள ரெட்மீ நோட் 7 ப்ரோ, ரியல்மீ 3 ப்ரோ ஆகிய மொபைல் ஃபோன்களுக்கு கடும் போட்டியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Jul 23, 2019, 2:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details