கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. இதுவரை இந்தியாவில் 1,071 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 29 பேர் உயிரிழந்தனர்.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு பொதுமக்களும் நிறுவனங்களும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துளளார். அதற்கான வங்கி கணக்குகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமரின் நிவாரண நிதிக்கும் உத்தரப் பிரதேச முதலமைச்சரின் நிவாராண நிதிக்கும் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக பிரபல சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போ அறிவித்துள்ளது.