தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

Latest Tech News பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான ஒன்ப்ளஸ் 7T! - ஒன்ப்ளஸ் புதிய மொபைல்

ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது புதிய மொபைல்ஃபோன் மாடலாக ஒன்ப்ளஸ் 7T என்ற புதிய மொபைலை நேற்று வெளியிட்டுள்ளது.

OnePlus 7T

By

Published : Sep 27, 2019, 1:17 PM IST

Latest Tech news பிரபல ஒன்ப்ளஸ் நிறுவனம் வருடத்திற்கு இரண்டு மொபைல் என்ற விகிதத்தில் வெளியிட்டுவருகிறது. அதன்படி இந்த ஆண்டின் இரண்டாவது மொபைல்ஃபோனாக ஒன்ப்ளஸ் 7T என்ற மாடலை நேற்று வெளியிட்டுள்ளது.

  • 6.55 இன்ச் ப்ளுயிட் அமோலேட் டிஸ்பிளே
  • பாதுகாப்பிற்கு கொரில்லா க்ளாஸ் வசதி
  • ஸ்னாப்டிராகன் 855+ பிராசஸர்
  • பின்புறம் 48 மெகாபிக்சல் கேமரா + 16 மெகாபிக்சல் வொய்டு ஆங்கிள் கேமரா + 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டா கேமரா
  • முன்புறம் 16 மெகாபிக்சல் கேமரா
  • 3800mah பேட்டரி
  • வார்ப் சார்ஜ் (Warp Charge) 30T அதிவேக சார்ஜிங் வசதி
  • ஆண்ட்ராய்டு 10 மையமாக வைத்து ஒன்பிளஸ் உருவாக்கியுள்ள ஆக்சிஜன் 10 இயங்குதளம்
    OnePlus 7T

ஃப்ராஸ்டட் சில்வர், கிலேசியர் புளு என்று இரு வேறு நிறங்களில் வெளியாகவுள்ள இந்த மொபைல் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அமேசான் இணையதளத்திலும் ஒன்ப்ளசின் அதிகாரப்பூர்வ கடைகளிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் (சேமிப்புத் திறன்) கொண்ட மாடல் ரூ. 37,999-க்கும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ. 39,999-க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: போட்டியை சமாளிக்குமா 'ரியல்மி XT'

ABOUT THE AUTHOR

...view details