தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

இந்தியாவில் ஒன்பிளஸ் 8இன் விலை இவ்வளவுதானா? - ஒன்பிளஸ்

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ, புல்லெட் வயர்லெஸ் இயர்போன் ஆகியவற்றின் விலையை ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

OnePlus
OnePlus

By

Published : Apr 20, 2020, 4:06 PM IST

கோவிட்-19 பரவல் காரணமாகச் சர்வதேச அளவில் பெரும்பாலான தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் புதிய தயாரிப்புகளின் வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளன.

இருப்பினும், பிரபல சீன நிறுவனமான ஒன்பிளஸ் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களான ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகியவற்றைக் கடந்த வாரம் வெளியிட்டது. அத்துடன் Bullets Wireless Z என்ற புதிய இயர்போன் மாடலையும் வெளியிட்டது.

இந்த ஸ்மார்ட்போன் வெளியானபோது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுக்கான விலை மட்டுமே அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இந்தப் புதிய மாடல்களின் விலை என்னவாக இருக்கும் என்று வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், இந்தியாவில் தனது தயாரிப்புகளுக்கான விலையை ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் 8 விலை

  • 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - 41,999 ரூபாய்
  • 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - 44,999 ரூபாய்
  • 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் - 49,999 ரூபாய்

ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை

  • 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் - 54,999 ரூபாய்
  • 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் - 59,999 ரூபாய்

இதேபோல Bullets Wireless Z என்ற புதிய இயர்போன் ரூ. 1,999-க்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் இவை விற்பனைக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் அறிவிக்கப்பட்ட விலையைவிட குறைவு என்பதால் ஒன்பிளஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

ஒன்பிளஸ் 8 அம்சங்கள்

  • 6.55 இன்ச் டிஸ்ப்ளே
  • ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
  • பின்புறம் 48 மெகாபிக்சல் கேமரா + 16 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 16 மெகாபிக்சல் ஹோல்பன்ச் கேமரா
  • ஆண்ட்ராய்டு 10ஐ மையமாகக் கொண்டு இயங்கும் ஆக்ஸிஜன் இயங்குதளம்
  • 4,300mah பேட்டரி
  • நிறங்கள் - கறுப்பு, வெள்ளை, பச்சை

ஒன்பிளஸ் 8 ப்ரோ அம்சங்கள்

  • 6.78 இன்ச் டிஸ்ப்ளே
  • ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
  • பின்புறம் 48 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 48 மெகாபிக்சல் கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 16 மெகாபிக்சல் ஹோல்பன்ச் கேமரா
  • ஆண்ட்ராய்டு 10ஐ மையமாகக் கொண்டு இயங்கும் ஆக்ஸிஜன் இயங்குதளம்
  • 4,510mah பேட்டரி
  • நிறங்கள் - கறுப்பு, நீலம், பச்சை

இதையும் படிங்க: ஐபோனின் மலிவான ஸ்மார்ட்போன் விலை இவ்வளவா?

ABOUT THE AUTHOR

...view details