பெய்ஜிங் (சீனா): சிடி ப்ரெஜெக்ட் ரெட் என்னும் விளையாட்டு தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஒன்-ப்ளஸ் தனது 8டி கைப்பேசியின் சிறப்புப் பதிப்பை வெளியிடவுள்ளது.
இந்த நிறுவனத்தில் புதிய டிஜிட்டல் விளையாட்டு தொகுப்பான சைபர்பங்க் 2077ஐ மையமாகக் கொண்டு இந்தக் கைப்பேசியின் வெளிப்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒன்-ப்ளஸ்8டி ‘சைபர்பங்க் 2077’ சிறப்பம்சங்கள்
- ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்சிஜன்ஓஎஸ் 11,
- 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.55 அங்குல முழு எச்டி + (1,080 x 2,400 பிக்சல்கள்) திரவ அமோலெட் தொடுதிரை
- 12 ஜிபி ரேம்
- ஸ்னாப்டிராகன் 865 SoC
- 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 உள் சேமிப்பு வசதி
ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.