நாடே கரோனாவால் வீட்டில் முடங்கியிருந்தபோது, ஒன்பிளஸ் நிறுவனம் தைரியமாக ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. முந்தைய மாடல்களைவிட இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை அதிகம் என்றாலும் ஒன்பிளஸ் ரசிகர்கள் இந்த ஸ்மார்ட்போனா வாங்க ஆர்வமாக இருந்தனர்.
அதன்படி மே 29ஆம் தேதி முதல் இவ்விரு ஸ்மாட்ர்போன்களும் விற்பனைக்குவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஊரடங்கு காரணமாக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தி தடைபட்டிருந்ததால் மே 29ஆம் தேதி ஒன்பிளஸ் 8 மட்டுமே விற்பனைக்குவந்தது.
இதனால், ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். நீண்ட தாமதத்திற்கு பின், தற்போது தேவையான ஸ்டாக்குகள் உள்ளதால், ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள், வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகிள்ளன.