தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

கூகுள் நமக்களித்த சிறப்பான உதவியாளர் ‘கூகுள் அசிஸ்டெண்ட்’ - GOOGLE HOME

நாம் ஸ்மார்ட் போனில் உபயோகிக்க கூடிய ‘கூகுள் அசிஸ்டெண்ட்’ போனில் ஏதாவது தேட வேண்டும் என்றாலோ அல்லது ஒருவருக்கு கால் செய்து பேச வேண்டும் என்றாலோ நம்முடைய ஸ்மார்ட் போனில் ஒகே கூகுள் என்று சொல்லி ஆரம்பித்து சமிங்ஞை அனுப்பினால் போதும் அடுத்த சில நொடிகளில் அது நாம் சொன்ன கட்டளையை ஏற்று அதை செயல்படுத்தும். இப்படி உதவிகரமாக இருக்கும் கூகுள் அசிஸ்டெண்ட்டில் உள்ள பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான அம்சங்களை பார்க்கலாம்.

google assistant
google assistant

By

Published : Apr 25, 2020, 2:06 PM IST

இன்று நாம் பயன்படுத்தும் பல அதிநவீன தொழில்நுட்பங்கள் நம்முடைய அன்றாட வேலைகள் அனைத்தையும் மிகவும் எளிதானதாக மாற்றியுள்ளன. அதில் முக்கிய பங்கு வகிப்பவை மடிக்கணினிகள், கைபேசிகள் போன்றவற்றில் இருக்ககூடிய நவீன வசதிகள். குறிப்பாக நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள் ஆகியன, காலத்திற்கு தகுந்தாற் போல் நாம் குரல் எழுப்பினாலே இயங்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளன. அந்த வகையில் கூகுள் நமக்களித்த உதவியாளராகக் கருதப்படும் கூகுள் அசிஸ்டெண்ட் என்னென்ன உதவிகளை பயனர்களுக்கு செய்துகொடுக்கிறது என்பதனைக் காணலாம்.

சுற்றுலா வழிகாட்டியாக...

நீங்கள் ஒரு இடத்தை, குறிப்பிட்ட நேரத்திற்குள் அடைய விரும்பினால், அதற்கான வழியை கூகுளிடம் கேட்டால் போதும், நீங்கள் செல்லக்கூடிய நேரத்தில் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், நீங்கள் அந்த இடத்தை சென்றடைய ஆகும் நேரம், மேலும் அந்த இடத்தை எவ்வாறு அடையலாம் என்பது வரை உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் அது அளிக்கும். உதாரணமாக நீங்கள் டெல்லிக்கு செல்ல விரும்பினால், ”கூகுள்” டெல்லிக்கு எப்படி செல்ல வேண்டும் என கேட்டால், அது பற்றிய முழு தகவல்களையும் அளிக்கும்.

மொழிபெயர்பாளராக...

நாம் பொதுவாக ஏதாவது வெளி மாநிலங்களுக்கு அல்லது வெளி நாடுகளுக்கு சென்றால் அங்கு பேசப்படும் மொழி தெரியாமல், அனுபவிக்கும் சிக்கல்கள் ஏராளம், அதேபோல வேறு மொழியில் இருக்கும் வார்த்தையை அரிய, டிக்‌ஷனரியில் இருக்கும் பக்கங்களை புரட்டுவதற்குள் அந்த வார்த்தையே மறந்து போய்விடும். இந்த இன்னல்களை போக்க கூகுள் அசிஸ்டெண்ட்டிடம் வணக்கம் என பிரெஞ்சு மொழியில் எப்படி சொல்ல வேண்டும் என்று கேட்டால் போதும் அதற்கான பதிலையும், அந்த வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பது வரை நமக்கு சொல்லும் இந்த கூகுள் நண்பன்.

வாட்ஸ்அப் காலிங்: இனி 8 பேர் வரை கூட்டாக வீடியோ அழைப்பில் பங்கெடுக்கலாம்

நினைவூட்டியாக...

வேலைக்கு சென்று அங்குள்ள எல்லா பிரச்னைகளையும் சமாளித்து, அதற்கு நடுவில் மனைவி, பிள்ளைகள் கூறும் பொருள்களையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு செல்லும் ஒரு சராசரி ஆண், ஒருவேளை அந்தப் பொருளை மறந்து வீட்டிற்கு சென்றால் அதை விட அதிக பிரச்னைகள் அங்கு காத்திருக்கும். இப்படி மறதி காரணமாக பல சிக்கல்களை சந்திக்கும் எல்லா நபர்களுக்கும் உதவும் வகையில் நாம் வாங்க வேண்டிய பொருள்களை அல்லது செய்ய வேண்டிய வேலைகளை நமக்கு நினைவூட்ட கூகுள் அசிஸ்டெண்டிடம் கூறினால் அது சரியாக அதே நேரத்தில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை நினைவூட்டும். மேலும் நாம் வாங்க வேண்டிய பொருள்களின் பட்டியல் கூகுள் ஹோம் (GOOGLE HOME) அல்லது கூகுள் கீப் (GOOGLE KEEP) ஆகியவற்றில் பதிவாகி நமக்கு அது நினைவுபடுத்தும்.

மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூகுள் இந்தியா அமைத்திருக்கும் தளம் YouTube Learning Destination!

மதிப்பாளராக...

மிகவும் சிக்கலான, நீண்ட கணக்குகள் நமக்கு எப்போதும் ஒரு சிறிய சலிப்பை உண்டாக்கும், அந்த கணக்குகளை சரிபார்க்க நாம் ஒரு பேப்பர் எடுத்து அதில் கணக்குகளை போட்டு சரிபார்ப்போம் அல்லது கால்குலேட்டரில் கணக்கு போட்டு பார்ப்போம் இனி எந்த சலிப்பும் இல்லாமல் கூகுள் அசிஸ்டெண்டிடம் உதவி கேட்கலாம். உதாரணமாக 20 ஆயிரம் மைல்களுக்கு எத்தனை கிலோ மீட்டர் என கேட்டால் அதற்கான சரியான பதில் நமக்கு கூகுளிடமிருந்து கிடைக்கும், அல்லது 1000 டாலர்களுக்கான இந்திய மதிப்பு என்ன என்று கேட்டால் அதன் சரியான மதிப்பை ஸ்பீக்கர் வாயிலாக நமக்கு அளிக்கும்.

ஆண்ட்ராய்டு கேமர்களுக்கு ஒரு நற்செய்தி: வருகிறது ஃபோர்ட்நைட்

எல்லாம் வல்ல...

நீங்கள் செய்திகள் அதிகமாக வாசிக்கும் அல்லது உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பவராக இருந்தால் அதற்கு கூகுள் அசிஸ்டெண்ட் ஒரு சிறந்த நண்பனாக இருக்கும். உங்களுக்குத் தேவையான செய்திகள் அல்லது நிகழ்வுகளை கூகுளிடம் சொன்னால் உடனடியாக உலகத்தின் எல்லா மூலைகளில் இருக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உங்களுக்கு அளிக்கும். மேலும் உலகில் ஏற்படும் எல்லா முக்கிய நிகழ்வுகளையும் நாம் கேட்காமலேயே நமக்கு அளிக்கும். இப்படி ஊதியமே வாங்காமல் நம்முடைய பல பிரச்னைகளுக்கு உதவும் இந்த கூகுள் அசிஸ்டெண்ட். சோம்பேறிகளுக்கான புகலிடம் என்று மட்டுமே பாராமல், மாற்று திறனாளிகளுக்கு பெரும் உதவியாளராக வலம் வருகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

ABOUT THE AUTHOR

...view details