தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

விட்ட இடத்தைப் பிடிக்கும் முனைப்பில் நோக்கியா! - latest tech news

மிட் ரேன்ஞ் செக்மென்டில் நோக்கியா நிறுவனம் புதிதாக 7.2 என்ற மொபைலை அறிமுகப்படுத்தியது.

Nokia 7.2

By

Published : Sep 19, 2019, 5:53 PM IST

Updated : Sep 19, 2019, 6:05 PM IST

ஒரு காலத்தில் உலகின் முன்னணி மொபைல்போன் நிறுவனமான நோக்கியா, சாம்சங் உள்ளிட்ட பிற கம்பெனிகளின் வருகையால் திவாலானது. பின்னர், நோக்கியாவை வாங்கிய HMD Globals, அதை மீண்டும் புதுப்பித்து புது ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், மிட் ரேன்ஞ் எனப்படும் ரூ. 12,000 - ரூ. 20,000 ரூபாய் செக்மென்டில் நோக்கியா புதிய மொபைலை வெளியிட்டுள்ளது.

  • 6.3 இன்ச் டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 660 பிரசாஸர்
  • 48 மெகாபிக்சல் கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா
  • 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
  • 3,5000mah பேட்டரி
  • கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதி
  • சார்கோல், மற்றும் பச்சை நிறங்களில் வெளியாகும்

இந்த மொபைல்போன் Android One Programஇல் உள்ளதால், ஆண்ட்ராய்டு 9 பை இயங்கு தளத்தில் இயங்குகிறது. இதன் காரணமாக விளம்பரங்கள் எதுவும் இந்த மொபைலில் வராது. மேலும் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டும் விரைவில் வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு கொண்ட மொபைல் ரூ. 18,599க்கும்; 6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு கொண்ட மொபைல் ரூ. 19,599க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த மொபைல்போன், ப்ளிப்கார்ட், நோக்கியாவின் அதிகாரப்பூர்வ தளங்களில் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய MI Band 4 அறிமுகம்!

Last Updated : Sep 19, 2019, 6:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details