தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

விரைவில் இந்தியச் சந்தைகளுக்கு வருகிறது மோட்டோரோலா எட்ஜ் ரகங்கள்! - tech news in tamil

லினோவோ நிறுவனம் கையகப்படுத்திய மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா எட்ஜ், மோட்டோரோலா எட்ஜ்+ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ளன.

Motorola Edge+ coming soon to India
Motorola Edge+ coming soon to India

By

Published : Apr 27, 2020, 1:32 PM IST

மோட்டோராலாவின் மிக வேகமான, மிக சத்தமான, மிகப் பெரிய தொழில்நுட்பத்துடன் இந்திய கைப்பேசி சந்தைகளுக்கு அறிமுகமாகவிருக்கிறது மோட்டோரோலா எட்ஜ், எட்ஜ்+ கைப்பேசிகள்.

5ஜி அலைகற்றை சிறப்பம்சத்துடன் வெளிவரும் நிறுவனத்தின் முதல் கைப்பேசி இதுவாகும். மோட்டோரோலா எட்ஜ் கைப்பேசியின் விலை 699 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 58 ஆயிரம் ரூபாய்) என்றும் மோட்டோரோலா எட்ஜ்+ 999 யூரோக்கள் (இந்திய மதிப்பில் 76 ஆயிரம் ரூபாய்) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா எட்ஜ்+ கைப்பேசி மே 14ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளதாகவும் மோட்டோரோலா அறிவித்துள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் கைப்பேசி குறித்த மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும்

ABOUT THE AUTHOR

...view details