தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

MIUI 12 அப்டேட் வந்தாச்சு.... ஸ்மார்ட்போன் பட்டியல் வெளியீடு! - MIUI 12 அப்டேட்

டெல்லி: சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு புதிதாக MIUI 12 அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

miui
miui

By

Published : Aug 13, 2020, 4:17 PM IST

சியோமி நிறுவனம் பயனர்களை கவர்வதற்காக அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்குவது வழக்கம்.அந்த வகையில், தற்போது பல்வேறு புதிய அம்சங்கள் கொண்ட MIUI12 அப்டேட்டை வெளியிட்டுள்ளது. சியோமி சாதனங்களில் MIUI அப்டேட் ஆண்ட்ராய்டு அப்டேட்டை விட செயல்திறனை அதிகம் தீர்மானிக்கிறது.

இந்த புதிய அப்டேட் முதற்கட்டமாக எம்ஐ 10,ரெட்மி நோட் 9,ரெட்மி நோட் 9 ப்ரோ,ரெட்மி நோட் 8,ரெட்மி நோட் 8 ப்ரோ,ரெட்மி நோட் 7,ரெட்மி நோட் 7 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு இம்மாதத்தில் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சியோமி இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி முரளிகிருஷ்ணன் கூறுகையில், "MIUI12இல் பல முக்கியமான அம்சங்கள் வரவிருக்கிறது.குறிப்பாக பஞ்சாங், காப்பி ஓடிபி, ஸ்மார்ட் ஐஆர்சிடிசி எஸ்எம்எஸ், எம்ஐயுஐ எஸ்எம்எஸ் காலர் ஐடி போன்ற பல்வேறு வசதிகள் உள்ளது. இந்த MIUI அம்சங்கள் தான் ஆண்ட்ராய்டிலிருந்து தனித்திருக்க உதவியாக உள்ளது.இதுமட்டுமின்றி MIUI 12 ஐகான்கள், புதிய காலெண்டர் அம்சங்கள், AI அழைப்பு, பாதுகாப்பு கருவிகள்,புதிய அனிமேஷன்கள் மற்றும் வால்பேப்பர்கள் உள்ளன" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details