தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் உடன் வெளியாகும் லெனோவா டேப்லெட்!

லெனோவா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான லெனோவா டேப் பி11 ப்ரோ, ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வசதியுடன் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுவருகிறது.

lenovo
லெனோவா

By

Published : Mar 22, 2021, 8:49 PM IST

லெனோவா நிறுவனம் டேப் பி11 ப்ரோ மாடலை, இந்தியச் சந்தையில் சமீபத்தில் ரூ.44,999 விலைக்கு அறிமுகப்படுத்தியது. லெனோவா டேப் பி11 ப்ரோ மாடலில் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே, டால்பி விஷன், ஹெச்டிஆர் வசதிகள் உள்ளன.

இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஹை-டெக் டேப் பி11 ப்ரோ மாதிரியை வெளியிடத் திட்டமிட்டுவருகிறது லெனோவா. அந்த டேப்பில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸரும், 8 ஜிபி ரேமும், 128 ஸ்டோரேஜ் வசதியும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிடைத்த தகவலின்படி, டேப் பி11 ப்ரோ டேப்லெட் ஆண்ட்ராய்டு 11இல் இசட்யுஐ (ZUI) 12.5 தளத்தில் இயங்கக்கூடியது. இந்த டேப்லெட்-க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:கூகுள் மேப்பில் டார்க் மோட் வசதி அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details